உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா; கவர்னர் ரவி ஒப்புதல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா; கவர்னர் ரவி ஒப்புதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.அண்மையில், சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். ''உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் ஒலிக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுகிறது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார். இதனால், 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர்.மேலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில், 37 மாற்றுத் திறனாளிகளும் வரும் காலங்களில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

D.Ambujavalli
ஜூன் 03, 2025 19:16

அத்தி பூத்தாற்போல் ஒரு நல்ல செயல் மசோதாவாக வந்ததால் அதையும் தடை செய்ய அவர் என்ன மனிதாபிமானம் அற்றவரா ? செய்தால் பயந்துகொண்டு செய்தார், தாமதித்தால் ஏச்சுப் பேச்சுக்கள் வேண்டாத மனைவி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற கதைதான்


Padmasridharan
ஜூன் 03, 2025 18:32

21 வகையாக தற்பொழுது கணக்கில் எடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வியை கற்றுக்கொடுக்க, கற்க வேண்டிய சிறப்பு கல்லூரிகளில் ஊழல் நடப்பது எப்பொழுது வெளியில் வரும் .


venugopal s
ஜூன் 03, 2025 15:22

எந்த மசோதாவாக இருந்தாலும் ஒப்புதல் கொடுத்துத் தான் ஆக வேண்டும்! வேறு வழி உள்ளதா?


தமிழன்
ஜூன் 03, 2025 11:45

என்ன செய்ய முடியும் ???


Sundar R
ஜூன் 03, 2025 10:27

இதுகாறும், கோட்டைக்கு உள்ளே இருந்த திமுக அரசு, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சொன்ன பின்பு, திமுக கோட்டை வாசல் கழுதையாக நிற்கிறது. மேதகு ஆளுநர் அவர்கள் ஒரே ஒரு கையெழுத்து போட்டால், திமுக அரசு காற்றில் கற்பூரம் போல் கரைந்து விடும். நிலைமை இப்படி இருக்க, ₹. 200/- பேர்வழிகள், மேதகு ஆளுநர் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பயந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவிற்கு கையொப்பம் போட்டுள்ளார் என்று சொல்வது நகைப்புக்குரியதாக இருக்கிறது.


Oviya Vijay
ஜூன் 03, 2025 10:09

வேறு என்ன சொல்ல...


Oviya Vijay
ஜூன் 03, 2025 10:00

எந்த மசோதாவையும் நீண்ட நாள் கிடப்பில் போட முடியாமல் அனுமதி தரும் கவர்னர்... இது தான் நிதர்சனம். இதற்காக சுப்ரீம் கோர்ட்டை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...


Nagendran,Erode
ஜூன் 03, 2025 10:53

அறிவாலய அடிமைகளுக்கு கவர்னரை வசைபாட இதுதான் நல்ல சந்தர்ப்பம்.


vivek
ஜூன் 03, 2025 11:26

இந்த டாஸ்மாக் ஆர்டிஸ்ட் கொத்தடிமைக்கு புரியுதா


Rengaraj
ஜூன் 03, 2025 12:27

ஒரு மண்ணும் கிடையாது. இது தேவை என்று ஒப்புதல் அளித்திருப்பார். இதிலும் ஜாதி, விகிதாச்சாரம், சமூகநீதி, பெரியார், அண்ணா , கலைஞர் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருந்தால் திமுக நீதிமன்றம் தான் சென்றிருக்கும்.