உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை விட்டு செல்லும் முதலீடுகள்: கவர்னர் ரவி கவலை

தமிழகத்தை விட்டு செல்லும் முதலீடுகள்: கவர்னர் ரவி கவலை

சென்னை: '' சில ஆண்டுகள் முன்பு வரை முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால், இன்று முதலீட்டாளர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.குடியரசு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் வளமான திறமைகள், திறன்களைக் காணும்போது, இதனால், நமது தேசத்தின் வளர்ச்சியின் இயந்திரமாக இருக்க முடியும். இதற்கு மாநிலம் மேம்பட வேண்டும். ஆனால், இது நடப்பது போல் தெரியவில்லை. முக்கியமான குறியீடுகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக நமது மாநிலம் சரிவுப்பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது.https://www.youtube.com/embed/bs0dTEn0eIsதமிழகம் வளர வேண்டும் என்றால், மிகச்சிறப்பான கல்வியும், திறன்களும் நமது இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும். மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், பள்ளிகளில் மாணவர்களின்கற்றல் வெளிப்பாடு எனும் போது, அது கடைத்தட்டில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகள் படிப்பதால், அரசுப் பள்ளிகளில்கற்றலில் ஏற்பட்டிருக்கும் சரிவு, ஏழைகளின் எதிர்காலத்தை மேலும் ஆபத்துக்கு உள்ளாக்குவதோடு, நீண்டகால சமூக மற்றும் பொருளாதார அநீதி அவர்களுக்கு இழைக்கப்படுவதை இது மேலும் அதிகப்படுத்தும்.உயர்கல்வியிலும் நிலைமை சிறப்பாக இல்லை. பெரும்பாலானபல்கலைகளில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. அவை மோசமான நிதி நெருக்கடியைச் சந்தித்து ருகின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளத்தை கூட அளிக்க முடியவில்லை. பல பல்கலைகள் 50 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்கள் எண்ணிக்கையோடு செயல்பட்டு வருகின்றன. சில பல்கலைகளில் பல ஆண்டுகளாக பதிவாளர்களும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களும் இல்லாமல் இருக்கின்றன. பல்கலைகளின் தன்னாட்சி முறை அழிக்கப்பட்டு விட்டது. நேர்மையான பல்கலை அதிகரிகள் புனையப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு போலீசாரின் அவமானகரமான உளைச்சலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். துணைவேந்தர்கள் இல்லாமை,பல்கலை அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.கல்வித்தரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக பட்டதாரிகளுக்கு வேலை கிடைககவில்லை. பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம அபாயத்தில் இருக்கிறது.கல்வி நிறுவனங்களை சுற்றி சட்டவிரோதமான போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமாக உள்ளது. சர்வதேச போதைப்பொருள் ககூட்டமைப்புகளோடு தொடர்புடைய சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பல்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. போதைப்பொருள் விற்பவர்கள் பிடிபட்டாலும், கூட்டமைப்புகளை இயக்கிவரும் பெரும்புள்ளிகள் தொடப்படுவதில்லை. முக்கியப்பள்ளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்று சொன்னால், பெருகி வரும்போதைப்பொருள் அபாயம் நமது எதிர்காலச் சந்ததிகளை அழித்துவிடும்.சில ஆண்டுகள் முன்பு வரை தனியார் முதலீட்டாளர்களால் விரும்பும் மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால், இன்று முதலீட்டாளர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஷரியானாவும், தெலங்கானாவும் ஒரு காலத்தில் நமக்கு அடுத்த நிலையில் இருந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் நம்மை பின்னுக்குத் தள்ளி முன்னேறி விட்டார்கள். குறைந்து வரும் தனியார் முதலீடுகள், தொழில்கள் மற்றும் சேவைத்துறைகளின் வேகத்தைக் குறைத்திருக்கிறது. என்ஐஏ., தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளையும், பயங்கரவாதிகளையும் கண்டுபிடித்து யெலிழக்க செய்துவருகிறது. சில பயங்கரவாத அமைப்புகள் ஆப்கன், மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளில் இயங்கி வரும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பு கொண்டவை, தேசிய பாதுகாப்பு பற்றிய தீவிரமான கவலையை அளிக்கும் விஷயம் இது. மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

pmsamy
ஜன 26, 2025 08:10

அறிவு இல்ல?


veera
ஜன 26, 2025 09:12

உனக்கு இல்லையென்று எங்களுக்கு தெரியுமே பீலா சாமி


அப்பாவி
ஜன 26, 2025 06:23

இவருக்கு என்ன பொறுப்பு? ராஜ்பவனில் இருந்தோமா? டீ பார்டி இத்யாதி குடுத்தோமான்னு இருக்கணும். இல்லே பதவியை உதறிட்டு தேர்தலில் நின்னு ஜெயிக்கணும். ஈரோடு இடைத்தேர்தலில் நின்னு கெத்து காமிக்க வேண்டியதுதானே.


தாமரை மலர்கிறது
ஜன 26, 2025 05:06

கம்பெனிகள் தமிழகத்தை விட்டு செல்வது சீனக்கனவு காணும் கம்யூனிஸ்ட்கள் காதுகளுக்கு இன்பத்தேனாக வந்து பாய்கிறது. டங்ஸ்டன் தொழிற்சாலையை விரட்டிவிட்டார்கள். முன்பு காப்பர் தொழிற்சாலையை விரட்டினார்கள். அணைத்து தொழிற்சாலைகளும் தமிழகத்தை விட்டு வெளியேறுவது இந்தியாவின் சமசீரான வளர்ச்சிக்கு நல்லது.


kantharvan
ஜன 27, 2025 12:08

மலரும்னு எழுது.


Barakat Ali
ஜன 26, 2025 01:29

முக்கியப்பள்ளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்று சொன்னால், பெருகி வரும்போதைப்பொருள் அபாயம் நமது எதிர்காலச் சந்ததிகளை அழித்துவிடும். உண்மையைச் சொல்லிக்கிட்டேதான் இருக்கீங்க ....


Kasimani Baskaran
ஜன 26, 2025 00:41

இரும்புக்கரம் தயாரிக்க உதவிய இரும்பை திராவிடன் கண்டுபிடிக்கவில்லை என்ற சோகத்தில் உடன் பிறப்புக்கள். பெரியார் மட்டும் இல்லன்னா இரும்புக்கரம் இருந்திருக்காது.


Tamil Inban
ஜன 25, 2025 23:40

இவர் சொல்வதில் துளியும் உண்மை இல்லை,


Priyan Vadanad
ஜன 25, 2025 22:41

தமிழ்நாட்டில் பாஜகவின் இந்த முதலீடு வெளியேறினால் தமிழ்நாடு சிறப்பாக தழைக்கும் என்று பலர் சொல்லுகிறார்கள்.


AMLA ASOKAN
ஜன 25, 2025 22:36

முதலீட்டாளர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது இவர் மட்டும் ஏன் செல்ல மாட்டேன் என அடம் பிடிக்கிறார் ?


T.sthivinayagam
ஜன 25, 2025 22:21

வேண்டாதவை மட்டும் இன்னும் விட்டு செல்லவில்லை


கிஜன்
ஜன 25, 2025 22:07

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் எதிர்த்தால் .... மற்ற மாநிலங்களுக்கு ஓடத்தான் செய்வார்கள் .... தமிழக தொழில்முனைவோர்களுக்கு ஆந்திரா சலுகைகளை அள்ளிக்கொடுத்து திருப்பதியில் துவங்கும்படி செய்கிறது .... நாம் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகளை பேசிக்கொண்டிருக்கிறோம் ....


சமீபத்திய செய்தி