உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழகத்தில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பாக சட்டசபையில் ஜனவரி மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. கனிமவளங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக டிசம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 07) ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம், கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி ஆகிய இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதவிக்காலம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
மார் 07, 2025 19:05

அட பரவாயில்லையே, இவர் கூட அவ்வப்போது ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை வேலை செய்கிறாரே!


P. SRINIVASAN
மார் 07, 2025 16:36

உனக்கு வேறையென்ன வேலை. கொடுத்துதான் ஆகவேண்டும்..


VSMani
மார் 07, 2025 15:44

பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒரு வரியா. ஒரு டன் க்கு 40 ரூபாய்க்கு வரி செலுத்திவிட்டு 4 லட்ச ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒரு பக்கம் கனிமம்களை எடுக்கக்கூடாது. இன்னொரு பக்கம் கனிமம்களுக்கு வரி. ஒன்றுமே புரியலையே?


GMM
மார் 07, 2025 15:10

கனிம வளங்கள் தேசிய சொத்து. மாநிலம் நில வரி விதிக்க முடியும். கனிமவங்கள் மீது வரி விதிக்க முடியாது. இதில் கிடைக்கும் வருவாய் ரிசர்வ் வங்கி கணக்கில் சேர வேண்டும். உள்ளாட்சி, மாவட்ட, மாநில, மத்திய அரசுக்கு உரியது கிடையாது. கனிம வள உரிமை மன்னராட்சிக்கு பொருந்தும். ஜனநாயகத்திற்கு சரிவராது. மாநில மசோதா ஒப்புதல் பொது உடமை நீக்கி, தனி உரிமையை ஊக்குவிக்கும். வளங்களை அபகரிக்க சண்டை, சச்சரவு ஏற்படும். மசோதா ரத்து செய்யும் வரை வரி வருவாய் சென்னை மாகாண மாநிலங்கள் அனைத்திற்கும் சேர வேண்டும்.


Sivagiri
மார் 07, 2025 14:58

சரி சரி, ஏதோ தப்பும் தவறுமா இருந்தாலும், ரெண்டு மஸோதாக்களாவது, கொஞ்சம் நீட்டா எழுதீருக்காங்க , பாஸ் மார்க் போட்ரலாம்னு , போட்டுட்டாரு போல ,


ஆரூர் ரங்
மார் 07, 2025 14:18

மக்களை சந்திக்க பயந்து உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு சட்டம். கனிமவளங்களை வட்ட மாவட்டம் சாப்பிட வசதியாக இன்னொரு சட்டம். கவர்னர் கையெழுத்து போடாம இழுத்தடித்தால் கோர்ட்டுக்கு பதில் சொல்லணும். நாடு எக்கேடு கெட்டால் யாருக்கேனும் கவலையுண்டா? பாமர/ அறிவாளி மக்களுக்கு இதெல்லாம் எப்போ புரியும்?


முருகன்
மார் 07, 2025 14:05

வேறு வழியில்லை


லிங்கம், கோவை
மார் 07, 2025 13:35

புதிய கல்வி கொள்கை கையெழுத்து வெப்சைட்... https://puthiyakalvi.in/ தயவுசெய்து இதுல போய் கையெழுத்து போடுங்க.


vivek
மார் 07, 2025 13:20

திமுக ஆட்டை போட முடியாத மசோதாக்கள் மட்டுமே கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்....சூப்பர்


Laddoo
மார் 07, 2025 12:15

ஆளுநர் ரவி அவர்களின் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் . கோர்ட்டும் கேள்வி கேக்க முடியாது. ஸ்டாலினும் பொத்தாம் பொதுவா ஏச முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை