உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கவர்னர் தமிழிசை சந்திப்பு புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கவர்னர் தமிழிசை சந்திப்பு புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் தமிழிசை டில்லி விரைந்துள்ள சூழ்நிலையில் அவர், கவர்னர் பதவியை ராஜினமா செய்துவிட்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட போகிறாரா என்று உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா,புதுச்சேரி மாநில கவர்னராக உள்ள தமிழிசை லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக அவ்வப்பபோது தகவல் பரவி வருகிறது. புதுச்சேரி ராஜ்நிவாசில் அன்மையில் நடந்த விழாவில் லோக்சபா தேர்தலில் போட்டியிட போகின்றீர்களா என்றதற்கு, அது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன்.தற்போது கவர்னராக இருப்பதால் அது குறித்து பேச முடியாது. தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்சாக இருக்கட்டும் என்றார்.அடுத்து நடிகர் விஜய் அரசியல் கட்சி துவக்கம் குறித்து கருத்து தெரிவித்த கவர்னர் தமிழிசையிடம், நீங்கள் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என்று மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.. கவர்னராக தொடர்வதா? தேர்தலா என்பதை முடிவு செய்து சொல்கிறேன் என அதிரடியாக தெரிவித்தார்.இது, லோக்சபா தேர்தலில் போட்டியிடும் எண்ணம் அவருக்கு இருப்பது உறுதியானது. இந்நிலையில் அவசர அழைப்பின் பேரில் நேற்று டில்லி விரைந்த கவர்னர் தமிழிசை, அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். பின்னர், பா.ஜ., தலைவர்களையும் அவர் சந்தித்தாக கூறப்படுகிறது.எனவே லோக்சபா தேர்தலில் அவர் தமிழகம் அல்லது புதுச்சேரியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக தகவல் பரவி வருகின்றது.புதுச்சேரி பா.ஜ.,சார்பில் நிர்மலா சீத்தராமன் நிறுத்தப்படலாம் என பேச்சு அடிப்பட்ட நிலையில் கவர்னர் தமிழிசை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுச்சேரியில் கவர்னர் பதவியில் தமிழிசை கவனித்துள்ள சூழ்நிலையில் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் துாத்துகுடியில் போட்டியிட்ட அவர்,தற்போது புதுச்சேரியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில் காங்.,கட்சிக்கு சரியான போட்டியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ