உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் தேநீர் விருந்து: தமிழக அரசு புறக்கணிப்பு

கவர்னர் தேநீர் விருந்து: தமிழக அரசு புறக்கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை கவர்னர் மாளிகையில் குடியரசு தினத்தன்று தேநீர் விருந்து நடப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. இதனை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fhnaeqx0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கவர்னர் மாளிகையில் நடக்கும் இந்த விருந்தை புறக்கணிக்க போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் தொடர்ந்து செயல்படுவதால், இந்த தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவித்துள்ளது. தி.மு.க., சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

veera
ஜன 26, 2025 12:40

விட்டு தள்ளுங்க


அப்பாவி
ஜன 26, 2025 06:31

நாலு நரிக்குறர்களுக்கு அழைப்பு குடுத்து விருந்து கொடுக்கவும். சனாதனத்தை நிலைநாட்டவும்.


RAAJ68
ஜன 26, 2025 03:10

பட்டினி சாவுகள் பல இடங்களில். அப்படி இருக்கையில் எதற்கு மக்கள் பணத்தில் ஆடம்பர தேனீர் விருந்து? இந்த சம்பிரதாயம் ஒழிக்கப்பட வேண்டும்.


T.sthivinayagam
ஜன 25, 2025 22:28

அடுத்தவங்க காசுல பொங்கல் சுண்டல் சாப்பிட்டுக்கிட்டு பிறரை ஓசி பிரியானி என்று சொல்வது வினேதமாக உள்ளது என்று மக்கள் கருத்து


தத்வமசி
ஜன 25, 2025 22:14

ஜால்ராக்களுக்கு வேறு என்ன தெரியும் ?


AMLA ASOKAN
ஜன 25, 2025 21:45

தமிழக அரசு மற்றும் கூட்டணி கட்சியினர் புறக்கணிப்பதை அவர் மிகவும் விரும்புகிறவர் . கவர்னர் தனக்கு விருப்பமானவர்களுடன் டீ குடித்துக் கொள்ளலாம் . தப்பொன்றுமில்லை .


Laddoo
ஜன 25, 2025 21:54

உங்களுக்கு ஓரூ ஸ்பெஷல் காக்கா கால் பிரியாணி. இதே போல் நாளை இன்னொரு முட்டு கொடுத்தால் இருநூறு ரூவா


Ramesh Sargam
ஜன 25, 2025 20:29

கவர்னர் டாஸ்மாக் விருந்து அளித்திருந்தால் தமிழக அமைச்சரவை அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக கலந்துகொண்டிருப்பார்கள்.


SUBBU,MADURAI
ஜன 25, 2025 20:28

குளத்தோடு கோவித்துக் கொண்டு போனால் யாருக்கு நஷ்டம் போன முறை இதேபோல்தான் நாங்கள் கவர்னரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்து விட்டு கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த பின் தனியாக திமுக மட்டும் கவர்னர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக போன்ற கூட்டணி கட்சிகளின் மூஞ்சியில் கரியை பூசியது திமுக அதே போல் இப்போது நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?


N.Purushothaman
ஜன 25, 2025 20:11

. ரவி அவர்கள் கவர்னரா வந்த பெறவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு திராவிட அமைச்சர் இந்த தேநீர் விருந்து செலவு குறித்து சர்ச்சை கருத்து கூறியதில் இருந்து மத்திய அரசின் தொகையில் இருந்து தான் அவர் செலவு செய்யறாரு ....


Ray
ஜன 25, 2025 19:51

தமிழ் அரிச்சுவடி - தமிழின் பெருமை அ வுக்கு அடுத்து ஆ வருவது அரசனும் ஆண்டியாகலாம் என்றுரைக்க இ க்கு அடுத்து ஈ வருவது இருப்பவன் ஈய வேண்டும் என்றுரைக்க உ க்கு அடுத்து ஊ வருவது உழைப்பே உயர்வு என்றுரைக்க எ க்கு அடுத்து ஏ வருவது எதையும் ஏனென்று சிந்திக்கச் சொல்லவே ஐ மட்டுமே தனித்திருப்பது ஏனென்றால் - நான் என்ற அகம்பாவமிருந்தால் தனிமைப் படுத்தப் படுவாய் என்று இடித்துரைக்க ஒ வுக்கு அடுத்து ஓ வருவது ஒற்றுமையே ஓங்கும் என்றுணர்த்த. எனவே ஐ நான் / தான் என்கிற குணம் ஒருவனை தனிமைப் படுத்திவிடும் எனக்காண்க.


Laddoo
ஜன 25, 2025 21:56

யாரவது இதற்கு அர்த்தம் சொன்னால் தேவல.


தத்வமசி
ஜன 25, 2025 22:16

முரசொலியையே படித்துக் கொண்டிருந்தால் தமிழ் அரிச்சுவடி புரியாது.


சமீபத்திய செய்தி