உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நரிக்குறவர், காணி, தோடர் மொழிகளை ஆவணப்படுத்தும் பணி அரசு துவக்கம்

நரிக்குறவர், காணி, தோடர் மொழிகளை ஆவணப்படுத்தும் பணி அரசு துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், பழங்குடியின மக்களான காணி, தோடர், நரிக்குறவர் பேசும் மொழியை ஆவணப்படுத்தும் பணியில், அரசு ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அழிந்து வரும் நிலையில் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் மொழியை ஆவணப்படுத்தும் முயற்சி துவங்கி உள்ளது. இதற்கு அரசு, 2 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதற்காக, சென்னையில் கடந்த செப்., மாதம், தேசிய அளவில் தொல்குடி மாநாட்டை நடத்தி, 'யுனெஸ்கோ' மற்றும் வெளிநாடுகளின் மொழி வல்லுனர்களுடனான ஆய்வு செய்தோம். அதன்படி, தற்போது அழிந்து வரும் நிலையிலுள்ள தோடர், காணி, சோளகர், கோத்தர் மற்றும் நரிக்குறவர் இன மக்களின் மொழியை தேர்வு செய்துள்ளோம். முதல்கட்டமாக, மாநிலம் முழுதும் வாழும் நரிக்குறவர் மக்கள் பேசும், 'வாக்கிரி பூலி' மொழியையும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள காணி இன மக்கள் பேசும், 'காணிக்காரர்' மொழியையும், நீலகிரி மலைப்பகுதியில் வசிக்கும் தோடர் மக்கள் பேசும், 'தோடா' மொழியையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.துறை சார்ந்த வல்லுனர்களின் உதவியுடன், ஏற்கனவே எழுதப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட பாடல்கள், ஆய்வு கட்டுரைகள், புத்தகங்களை அடிப்படையாக வைத்து, இத்துறைகளில் சிறந்த மூன்று வல்லுனர்களுர்களின் மேற்பார்வையில், ஆவணப்படுத்தும் நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் வாய்வழி இலக்கியங்களை, எழுத்து மற்றும் அகராதி வடிவிலும், பாடல்கள் அடங்கிய தொகுப்புகளாகவும் வெளியிட உள்ளோம். கடவுள் மற்றும் வலாற்று நிகழ்வுகளை, கட்டுரை, புத்தகம் என, அனைத்து வடிவிலும் வெளியிடும் முயற்சியை எடுத்து வருகிறோம். துறை சார்ந்த வல்லுனர்கள், மொழியியல் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மேற்பார்வையில், 3-0க்கும் மேற்பட்டோர் உதவியுடன், இந்த மூன்று மொழிகளும் ஆவணமாகி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Svs Yaadum oore
நவ 21, 2024 08:00

நமது நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு ...பழங்குடி இனத்தவர் என்பதால் அவர்கள் பெயரை வைத்து பள்ளியில் கேலி கிண்டல் ....விடியல் திராவிடனுங்க ஆட்சியில் அதே நிலைமை தமிழ் நாட்டிலும் ....தஞ்சை தமிழ் பல்கலையில் பழங்குடிமக்கள் ஆய்வு மையம் என்று உண்டு .....ஆனால் இந்த பல்கலை செயல்படுதா இல்லையா என்பதே தெரியாது .....தமிழ் வளர்த்த திராவிடனுங்க ....


Svs Yaadum oore
நவ 21, 2024 07:15

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி, வரலாற்றை அழித்தால் போதும்.... தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.....ஒவ்வொரு தமிழக பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன. ஆனால் பழங்குடியினர் பேசக்கூடிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது, பழங்குடியினரின் இடம்பெயர்வு காரணங்களுக்காக பழங்குடியின மக்களின் மொழிகள் தற்போது அழியத் தொடங்கியுள்ளன.... .இவர்கள் மக்கள் தொகையும் குறைந்துகொண்டே உள்ளது ....நீலகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தோடர் இனச் சிறுவனான பத்து வயது பொன்ஷ்குட்டனிடம் பேசும்போது, பள்ளியில் அவன் பெயர் பொன்ஷ்குட்டன் கிடையாது தீபக் என்று சொன்னானாம் ....தமிழ் தமிழன் தமிழன்டா ...


புதிய வீடியோ