உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலந்தாய்வில் பணியிடங்கள் மறைப்பு; பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

கலந்தாய்வில் பணியிடங்கள் மறைப்பு; பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை : பட்டதாரி ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வில் காலி பணியிடங்களை மறைத்து கலந்தாய்வு நடத்துவதாக கூறி சிவகங்கையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. சிவகங்கை மருதுபாண்டியர்நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த கலந்தாய்வில் காலி பணியிடங்களை மறைத்து கலந்தாய்வு நடத்துவதாக பட்டதாரி ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் ஓ.சிறுவயல் பள்ளியில் ஆங்கில பட்டதாரி பணியிடம், கோட்டையூர், சண்முகநாதன்பட்டினம் பள்ளிகளில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்கள் கலந்தாய்வு நடந்த பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ கூறியதாவது: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை இருப்பதை காரணம் காட்டி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மாறுதல் கலந்தாய்வு நடக்கும் இச்சூழலில் இதுவரை மூன்று முறை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் காலிப் பணியிடங்கள் நிர்வாக மாறுதல் என்ற போர்வையில் விற்கப்படுகின்றன. பள்ளி கல்வித்துறை ஒரு மாறுதல் கலந்தாய்வை கூட சிறப்பாக நடத்த இயலவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
ஜூலை 15, 2025 07:46

சாமியோவ், employment office ல போங்க இன்னும் நிறைய ஊழல் வெளியில் வரும். Renewal க்கு போனால் Registration பண்ணது காணவில்லையென்று புதிதாக பதிக்கின்றனர்.


ஜான் குணசேகரன்
ஜூலை 15, 2025 05:25

திராவிடம் என்றால் என்ன என்று கேட்டவர்களுக்கு இதுதான் பதில். ஒவ்வொரு குடும்பத்திலும் திராவிடத்தின் கேடு எதாவது ஒரு விதத்தில் இருக்கும். அதை பணமாக்குவது தான் திராவிட மாடல் ஆட்சி.


புதிய வீடியோ