தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பெரம்பலுார்: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா நடந்தது.தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசுகையில், 'பொறியியல் கல்லுாரியில் பட்டம் பெறும் மாணவர்கள், உலகின் தலைசிறந்த ஆளுமைமிக்க மனிதர்களாக தொழில்நுட்ப திறமை, நிர்வாகம் மற்றும் சிறந்த பண்புகளுடன் வரவேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையை, இந்த கல்லுாரியில் பயின்ற அனுபவம் நிச்சயமாக ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை உண்மையாக்கும் வகையில் அனைவரும் உயர்ந்து, கல்லுாரிக்கு பெருமையும் சேர்க்க வேண்டும்' என்றார்.கல்வி குழும நிறுவனங்களின் செயலர் நீலராஜ் முன்னிலை வகித்தார். சென்னை, கேப்ஜெமினி நிறுவனத்தின் துணை தலைவர் தினகர் ஜேக்கப் செல்வின், ஹைதராபாத் சின்க்ரோனி சர்வதேச சேவைகள் நிறுவனத்தின் துணை தலைவர் ரூபஸ்ரீ ரங்கண்ணா ஆகியோர் பங்கேற்று 1,086 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினர்.விழாவில், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி முதல்வர் சண்முக சுந்தரம் வரவேற்று, ஆண்டறிக்கை வழங்கினார். பல்கலைக் கழக கூடுதல் பதிவாளர் இளங்கோவன், கல்வி குழும நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார், பொறியியல் கல்லுாரி டீன்கள் அன்பரசன், சிவராமன், சண்முகசுந்தரம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்லப்பன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்பு, இன்டெர்னல் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் செல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, பேராசிரியர் கோவிந்தசாமி, பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.