உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பாதியில் முடங்கும் கிரானைட் குவாரி டெண்டர்கள்

 பாதியில் முடங்கும் கிரானைட் குவாரி டெண்டர்கள்

சென்னை: தமிழகத்தில் கருங்கல் குவாரிகள் போன்று, கிரானைட் வெட்டி எடுப்பதற்கான குவாரிகளுக்கும் உரிமம் வழங்கப்படுகிறது. எந்தெந்த பகுதியில் கிரானைட் உள்ளது என்பதை ஆய்வு செய்து, அதற்கான டெண்டர்கள் வெளியிடப்படுகின்றன. பொதுவாக, கிரானைட் குவாரிகளுக்கான ஒப்பந்தத்தை பெற, டெண்டர்களில் பங்கேற்க கடும் போட்டி நிலவும். இந்நிலையில், கடந்த, மார்ச் மாதம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 20 இடங்களில் கிரானைட் குவாரிகளுக்கான, 'டெண்டர்கள்' வெளியிடப்பட்டன. தேர்தல் முடிந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது வரை, அந்த டெண்டர்களில் பங்கேற்க, யாரும் முன்வரவில்லை. இது குறித்து, கனிமவளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'குவாரிகளில் முறைகேடுகள் செய்வோருக்கு கிடுக்கிபிடி போடப்பட்டுள்ளது. இதனால், வழக்கமான நிறுவனங்கள் வர தயங்குகின்றன. இதன் காரணமாக, 'டெண்டர்' பணிகள் முடங்கியுள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !