உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  லகான் இல்லாத சாம்பல் நிறக்குதிரை

 லகான் இல்லாத சாம்பல் நிறக்குதிரை

ஆசிரியர் : நந்தவனம் சந்திரசேகரன் வெளியீடு : ↓இனியநந்தவனம் பதிப்பகம் 17, பாய்க்கார தெரு, உறையூர், திருச்சி - 620 003 அலைபேசி : 94432 84823 பக்கம் : 168 விலை : ரூ.170 எழுத்தாளரும், கவிஞருமான நந்தவனம் சந்திரசேகரனின் புதுமையான கவிதை நுால் இது. தலைப்பிற்கேற்றவாறு, லகான் இல்லாத குதிரை போன்று கட்டற்று பாயும் கற்பனைகளாலும், தேர்ந்த சொல்லாட்சியாலும், உயர்ந்த சிந்தனைத்திறனாலும் அருமையான கவிதைகளை தந்திருக்கிறார். காடு, நாடு, காதல், கம்பீரம், மனிதம், மனிதநேயம், பண்பாடு, மொழியுணர்வு என்று வெவ்வேறு துறைகளுக்கு கவிதை பாடியுள்ளார். எந்த கவிதைக்கும் தலைப்பு தரவில்லை; என்றாலும் ஒவ்வொரு கவிதையும் தனித்துவமாக தலைநிமிர்ந்து நம்மை வாசிக்க வைக்கிறது. துண்டு துண்டாய் எழுதிய பின்பே ஒன்று சேர்க்கிறேன் கவிதையை பின்பு எனக்கே தெரியாமல் ஆயுதமாகும் போது நாம் என்ன செய்ய முடியும்' என்பது போன்ற காகிதத்தால் ஆயுதம்' செய்த கவிதைகள் அதிகம். - -ஜிவிஆர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ