உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பசுமை பூங்கா அறிவிப்பால் மனசுக்கு நிறைவா இருக்கு; மகிழ்ச்சியுடன் சொல்கிறார் அன்புமணி!

பசுமை பூங்கா அறிவிப்பால் மனசுக்கு நிறைவா இருக்கு; மகிழ்ச்சியுடன் சொல்கிறார் அன்புமணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பதற்கு வரவேற்பு தெரிவித்த பா.ம.க., தலைவர் அன்புமணி, கோயம்பேட்டில் சென்னையில் 2வது பெரிய பூங்கா அமைக்க நடவடிக்கை தேவை என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில், அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் 118 ஏக்கர் நிலத்தில் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நிலத்தை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

மகிழ்ச்சி

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுபின்படி சென்னை மாநகரத்தின் மக்கள்தொகை 86.9 இலட்சம். மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிக மக்கள் குடியேறுதல் காரணமாக சென்னையின் மக்கள்தொகை கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக இப்போது ஒரு கோடியை கடந்திருக்கக்கூடும். இந்திய அளவிலும், உலக அளவிலும் இந்த அளவுக்கு மக்கள்தொகை கொண்ட மாநகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் உள்ள பூங்காக்களின் பரப்பு மிகவும் குறைவு . அதனால், சென்னையில் மிகப்பெரிய பூங்காக்களை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதையேற்று கிண்டியில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அரசு அமைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மனநிறைவு

அதைவிட மகிழ்ச்சியளிக்கும் செய்தி சென்னையின் பசுமைப்பரப்பு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை முதன்முறையாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு, பசுமைப்பூங்கா அமைக்க வேண்டியிருப்பதை வலியுறுத்தியிருப்பது தான். 'சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப் பகுதி (Per capita green cover) 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது. மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 விழுக்காடாகத் தான் உள்ளது” என்று தமிழக அரசு ஒப்புக் கொண்டிருப்பது மனநிறைவளிக்கிறது.

டில்லியை பாருங்க

தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கிண்டியில் 118 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டாலும் கூட சென்னையின் பசுமைப்பரப்பு பிற நகரங்களுக்கு இணையாக இருக்காது. டெல்லியில் மெஹ்ராலி பூங்கா 200 ஏக்கரிலும், லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இவை தவிர டில்லியின் பதர்பூர் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா 880 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் லால்பாக் பூங்கா 240 ஏக்கரிலும், கப்பன் பூங்கா 100 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களுக்கு இணையாக சென்னையின் பசுமைப்பரப்பை அதிகரிக்க கிண்டியில் அமைக்கப்படுவது போன்ற பூங்காக்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட வேண்டும்.

2வது பெரிய பூங்கா

எனவே, சென்னையில் கிண்டி பூங்கா தவிர, கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் அமைந்துள்ள 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா அமைந்துள்ள 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்தம் 66.4 ஏக்கர்பரப்பளவில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kulandai kannan
செப் 23, 2024 22:32

பூங்கா என்றாலே குடி, கஞ்சா, வகையறா பின்னாலே வந்துவிடும்.


Ramamurthy N
செப் 23, 2024 18:13

இங்கே கருத்துக்களை பதிவிடுபவர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் வீட்டை கட்டியுள்ளோம் என்று சத்தியம் செய்வார்களா? மக்களும் திருந்த வேண்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 23, 2024 13:28

ஆரம்பிக்கும்போது எல்லாம் நல்லா அறிக்கை விடுவானுங்க. அப்புறம் செடி ஊழல், கொடி ஊழல், மரம் ஊழல், உரம் ஊழல், கட்டிடங்கள் மக்கள் நடைபாதை, திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள், கழிப்பிடம், ஆடிட்டோரியம், விஐபி தங்குமிடம், வாட்ச்மேன் விடுதி, அவசர மருத்துவ அறை, டிக்கெட் வழங்கும் அறை, வண்டிகள் சென்றுவர தார்ச்சாலை என்று கட்டிடமாக கட்டி ஊழல் செய்து அதையும் வீணாக்கிவிடுவார்கள். நடுவில் உருப்படாதவன் ரெண்டு பேருக்கு சிலை வைப்பானுங்க - ஆனால் சிறிய விநாயகர் கோயில் கட்டமாட்டானுங்க. இங்கு தவறுகள் மட்டுமே சரியாக செய்யப்படும்.


ஆரூர் ரங்
செப் 23, 2024 12:18

இனிமேல் கூவம் நதியை தூய்மைப்படுத்தவே முடியாது. ஏனெனில் ஆற்றில் வந்து கொண்டிருந்த நீரைத் தடுத்து குடிநீர் நீர்த்தேக்கமாக ஆக்கப்பட்டுவிட்டது இப்போது நீரோட்டமேயில்லாமல் குப்பையும் சாக்கடையும் மட்டுமே கலந்துள்ளன. நல்ல நீர் ஓட வாய்ப்பேயில்லை. சுகாதாரக்கேடு மட்டுமே. எனவே கூவத்தைத் தூர்த்துவிட்டு பூங்காக்களை அமைக்கலாமே. பக்கிங்ஹாம் கால்வாய்யையும்தான்.


ஆரூர் ரங்
செப் 23, 2024 12:07

பெட்ரோல் டீசல் வாகனங்கள், மக்கள் நெருக்கம் குறையும்வரை எத்தனை பூங்காக்கள் அமைத்தாலும் பலனிருக்காது . வாகனப் பெருக்கத்தை எதிர்த்து போராடத்தயாரா? வாக்குவங்கி மிச்சமிருக்காது.


S.V.Srinivasan
செப் 23, 2024 11:52

அறிவுப்புக்கே மகிழ்ச்சி ஆகிற அப்பாவியா இருக்காரே. திட்டம் நிறைவேறுமா ???


karupanasamy
செப் 23, 2024 11:44

சிறுத்த பயபுள்ளைக்கு வவுத்தால போகணுமே


ponssasi
செப் 23, 2024 10:04

பாட்டாளி மக்கள் கட்சியுடன் கருத்து மோதல் இருந்தாலும் எனக்கு அன்புமணி மீது தனி மரியாதை உண்டு. பசுமை பூங்கா என்பதையும் தாண்டி மழைநீரை சேமிக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த ஏரி குளங்களை கண்டறிந்து அதை மீட்டெடுக்க வேண்டும். வள்ளுவர் கோட்டம் அமைத்திருக்கும் பகுதி பெரிய எரி தான். அதில் வள்ளுவர் அமர்ந்திருக்கும் தேரை மட்டும் விட்டுவிட்டு அதை மிகப்பெரிய ஏரியாக மாற்றவேண்டும். சென்னை மற்றும் வருங்கால சந்ததியரின் நலன் கருதி இவையெல்லாம் அவசியம் செய்யவேண்டும்


ஆரூர் ரங்
செப் 23, 2024 12:10

வள்ளுவர் கோட்டம் , நுங்கம்பாக்கம் தி.நகர் பகுதிகள் நீர்நிலைகளை அழித்து உருவாக்கி விற்றது அரசுதான். நடைமுறை சாத்தியமற்ற ஆலோசனைகள் அனாவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை