உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோல்டு பார் ஆல் சிறப்பு திட்டம் ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் அறிவிப்பு

கோல்டு பார் ஆல் சிறப்பு திட்டம் ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் அறிவிப்பு

சென்னை:ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ், தன் வாடிக்கையாளர்களுக்காக, 'ஜி.ஆர்.டி., கோல்டு பார் ஆல்' என்ற சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், சேதாரம் வெறும் 5 சதவீதம் முதல் துவங்குவதால், வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தை அனுபவிக்க முடியும்.இதுகுறித்து, ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.அனந்தபத்மநாபன் கூறியதாவது:பணம் படிப்படியாக கையில் வரும்போது, நாம் நகைகள் வாங்குவது, தலைமுறைகள் வழியாக வந்த ஒரு வாழ்க்கை முறை.இன்றைய காலகட்டத்தில் தங்கம் விலை எதிர்பாராத மாற்றங்களில் இருப்பதால், நாங்கள், 'கோல்டு பார் ஆல்' என்ற இலக்கை அறிமுகம் செய்துள்ளோம். இது உயர்தர நகைகளை, உண்மையாகவே எளிதாக கிடைக்க செய்யும் ஒரு முன்னெடுப்பாகும். இது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உண்மையில் பயனளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார். ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்., ராதாகிருஷ்ணன் கூறியதாவது:கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல், வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெற்ற பாக்கியத்தை அடைந்துள்ளோம். எனவே, அவர்களின் தேவையை எப்படி புரிந்துகொள்ளாமல் இருக்க முடியும். தங்கம் விலை நிலவரங்கள் ஏற்ற இறக்கமாகும் இந்த காலகட்டத்தில், அனைவருக்கும் தங்கம் வாங்கும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு. அனைவரும் ஜி.ஆர்.டி.,க்கு வந்து, பொக்கிஷமான நகைகளை வாங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ