உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜிஎஸ்டி சீர்திருத்தம் அல்ல, புரட்சி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

ஜிஎஸ்டி சீர்திருத்தம் அல்ல, புரட்சி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவில்பட்டி: ஜிஎஸ்டி சீர்திருத்தம் பிரதமர் மோடி கொடுத்த தீபாவளி பரிசு. ஜிஎஸ்டி சீர்திருத்தம் அல்ல, புரட்சி என தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் தீப்பெட்டித் தொழிலில் பெண்களின் பங்களிப்பையும், மத்திய அரசின் திட்டங்களையும், எதிர்கால இலக்குகளையும் குறித்து விரிவாகப் பேசினார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தீப்பெட்டித் தொழிலின் வளர்ச்சிக்கு பெண்களே அச்சாணி. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் கடின உழைப்பை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6qiifi8x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சீர்திருத்தம் அல்ல, புரட்சி

இந்தத் தொழில், தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கிறது. தீப்பெட்டி தொழிலின் அச்சாணிகளாக தமிழக பெண்கள் திகழ்வதால், மத்திய அரசின் கடமையே தென் மாவட்டங்களுக்கு உதவுவது தான். 2047ம் ஆண்டிற்குள் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் 375 பொருட்களுக்கு விலை குறைப்பு, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அல்ல, புரட்சி. தீப்பெட்டி தொழிலாளர்கள் நலனுக்காக திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.

ஜிஎஸ்டி வரி

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மக்களின் உண்மையான பிரச்சனைகள், பாதிப்புகள் மற்றும் கோரிக்கைகளை நன்கு தெரிந்த ஒருவரையே சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்திய அரசு அண்மையில் 375 பொருட்களுக்கு 10% வரை ஜிஎஸ்டி வரியைக் குறைத்துள்ளது. இந்தக் குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும். இது பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் தீபாவளிப் பரிசு. இந்த வரி குறைப்பு, மக்கள் பொருட்களை வாங்கும்போது பணத்தைச் சேமிக்க உதவும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

வாழ்வாதாரத்தைக் காப்பாற்றியவர்!

நாட்டில் சிகரெட் லைட்டர் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்; தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைத்து பெண்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றியவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தூத்துக்குடியில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு விமான சேவையைத் தொடங்க வேண்டும் என தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
செப் 20, 2025 18:50

காங்கிரஸ் ஆட்சியில் 2 லட்சத்துக்கே வருமான வரி செலுத்த வேண்டியதிருந்தது . இப்போ பனிரெண்டு லட்சம் வரை வரியில்லை. . ஆனால் பச்சைக் கும்பலுக்கு திருப்தியில்லை. ஏனெனில் இப்போது வரிஏய்ப்பு மிகவும் கடினம்.


என்னத்த சொல்ல
செப் 20, 2025 18:42

எப்படிம்மா இது புரட்சி... வரியை ஏத்தி மக்களை கஷ்டப்படுத்திவிட்டு, இப்போது குறைத்தால் அது புரட்சியா...


ஆரூர் ரங்
செப் 20, 2025 18:00

ஜிஎஸ்டி யை யாராவது எதிர்க்கிறார்கள் என்றால் அதற்கு முன்புவரை வரிஏய்ப்பு செய்து கொண்டிருந்தவர்கள், அல்லது உடன்பட்ட ஆட்கள் என அனுமானிக்கலாமா? ஹெல்த் இன்சூரன்ஸ்க்கு சேவை வரி என்ற ஒன்றை இறக்குமதி செய்தது பசி. அப்போ இவர்கள் வாயே திறக்கவில்லை.


Ravanan Ramachandran
செப் 20, 2025 16:07

இப்போது புரட்சி என்றால் ...முதன் முதலில் gst போட்டபோது வீழ்ச்சியா? பாடுபட்டு உழைத்த மக்களின் பணத்தை வரியாக பல லட்சம் /கோடி என்ற வகையில் சுரண்டிக்கொண்டு விட்டு இப்போது வீர வசனம் பேசி என்ன பயன்? ...எல்லாம் சமீபத்தில் வரக்கூடிய தேர்தல் படுத்தும் பாடு .


ஆரூர் ரங்
செப் 20, 2025 17:17

ஜிஎஸ்டி அறிமுகத்திலிருந்து வரி விகிதங்களை ஒருமனதாக ஆதரித்து ஏற்றது திமுக காங்கிரஸ் புள்ளி ராஜா கூட்டணி ஆட்சிகள். இப்போது வரிவிகித குறைப்பை முதலில் ஆதரித்தும் பிறகு மறைமுகமாக எதிர்த்து தங்களது ஊழல் சுரண்டலுக்கு நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூப்பாடு போடுறதும் அவர்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை