உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குண்டு காயத்துடன் இறந்து கிடந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., குர்பிரீத்; பஞ்சாபில் பரபரப்பு

குண்டு காயத்துடன் இறந்து கிடந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., குர்பிரீத்; பஞ்சாபில் பரபரப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., குர்பிரீத் கோகி குண்டு காயத்துடன் இறந்து கிடந்தார். கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., குர்பிரீத் கோகி நள்ளிரவில் குண்டு காயத்துடன் விழுந்து கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ngmpirm9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குர்பிரீத் கோகி 2022ம் ஆண்டு ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்தார். பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில், லுாதியானா தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாரத் பூஷன் ஆஷூவை தோற்கடித்தார். இந்த சம்பவம் பற்றி , டி.ஜி.பி., ஜஸ்கரன் சிங் தேஜா கூறும்போது, துப்பாக்கி குண்டு காயங்களுடன் கோகி கிடந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு காரணம் தெரிய வரும் என்றார். உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது, குர்பிரீத் கோகி தற்செயலாக சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்துள்ளது என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. எனினும் போலீசார் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 11, 2025 09:41

துப்பாக்கி யை சுத்தம் செய்யும் போது cartridge அதாவது குண்டுகள் இருக்கும் கார்ட்ரிட் ஜை வெளியே எடுத்து விட்டு, சுத்தம் செய்ய வேண்டும். அதை விடுங்க, துப்பாக்கி யை என்ன மூக்குகண்ணாடி மாதிரி எப்பவும் வெளியே தெரியற மாதிரி மாட்டிக்கிட்டா இருப்பார்? எதுக்கு சுத்தம் செய்ய வேண்டும்??


அம்பி ஐயர்
ஜன 11, 2025 09:03

நடு ராத்திரி தான் துப்பாக்கியை சுத்தம் செய்வாங்களா....??? என்ன ஒரு பேத்தல்....


பாமரன்
ஜன 11, 2025 08:54

இந்த தனிப்பட்ட நபர்கள் வைத்திருக்கும் துப்பாக்கி லைசென்ஸ் அனைத்தையும் கேன்சல் செய்யனும்... வசதி இருப்பவன் காசு கொடுத்து தனியார் பாதுகாப்பு வச்சிக்கட்டும்... அதென்னங்கய்யா க்ளீன் பண்ணும் போது வெடிக்குது... எதுக்கும் ஆம் ஆத்மி டீம்கா ஒயிக ஸ்வாஹா அப்பிடின்னு சொல்லி விட்டு போவோம்...


chandrakumar
ஜன 11, 2025 10:17

சரிங்க தலைவா ஒருவர் கார் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்ட லைசென்ஸ் வைத்துள்ளார் சாலையில் விபத்து ஏற்படுகிறது இப்ப தனிநபர் லைசென்ஸ் அனைத்தையும் கேன்சல் செய்துவிட்டு பஸ் அல்லது ரயிலில் போக சொல்வீர்களா? விபத்து என்பது ஏதோ ஒரு தவறால் நிகழ்வது எதுவாக இருந்தாலும் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜன 11, 2025 08:19

ஆம் ஆத்மீக்கு ஏன் துப்பாக்கி என்று கேள்வி கேட்டால் அவன் சங்கி..