உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து கோரி மனு தாக்கல்

ஜி.வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து கோரி மனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 24) விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி., பிரகாஷ் குமார். படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது காதல் மனைவி சைந்தவி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.தங்களுக்கு விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் இன்று (மார்ச் 24) மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது பிரகாஷ் குமார் சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதையடுத்து பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sankare Eswar
மார் 25, 2025 15:21

ராமு தகவல்: என்ஜோய்மேன்ட் விதோட் கமிட்மென்ட்


Jai Sriram
மார் 25, 2025 01:06

ஜீவனாம்சம் பெற்ற பணத்திற்கு வரி கிடையாது. கறுப்பு பணம் வெள்ளையாக இது சமீபகால யுக்தி. அரசை ஏமாற்றவே திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் போலி விவாகரத்து செய்கின்றனர். சில காலம் பிரிந்து மீண்டும் சேர்ந்து கொள்வர். சமீபத்தில் இசைப்புயல் செய்தாரே.


R S BALA
மார் 24, 2025 19:53

மோகத்தால் வந்த காதல் இப்படித்தான் சீக்கிரம் கசந்து போகும்.. பாவம் அந்த பெண்குழந்தை.


Ramalingam Shanmugam
மார் 24, 2025 16:58

SETTLEMENT காக திருமணம் அது முடிந்தது இப்போ DIVORCE NO FUN ஸ்


vijai hindu
மார் 24, 2025 16:46

இது எல்லாம் ஒரு செய்தி போடாதீங்க தினமலருக்கு அழகு இல்லை


A P
மார் 24, 2025 16:20

இது எத்தனையாவது விவாகம், இது எத்தனையாவது ரத்து என்று கேட்கும் அளவுக்கு, சில கெட்ட குடும்பங்களில் இந்த காலத்தில் விவாக ரத்துகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. எனவே, இது போன்ற கெட்ட குடும்பங்களில் விவாகம் நடக்கும்போதே, நாமெல்லாம் வாழ்த்தும்போது, " சீக்ரமேவ விவாக ரத்து ப்ராப்திரஸ்து " என்று வாழ்த்தலாம். ரொம்ப கேவலமாக இருக்கிறது. மறுபடியும் விவாகம் நடக்கையில் இதனைப் பார்ப்பதற்க்கே அருவறுப்பாகத்தான் தோன்றுகிறது.


Jayaraman Rangapathy
மார் 24, 2025 15:34

அவங்க பிரிஞ்ஆ என்ன பிரியாட்டா என்ன


SUBBU,MADURAI
மார் 24, 2025 16:40

இது கவிஞர் வைரமுத்துவுக்கு தெரியுமா?


Palanisamy T
மார் 24, 2025 14:47

இப்போதெல்லாம் விவாகரத்து கலாச்சாரம் பற்றி நிறைய படிக்கின்றோம் பார்க்கின்றோம் பேசுகின்றோம். குறிப்பாக திரையுலக நடிகர் நடிகைகள் வீட்டில்தான் இது மிகவும் அதிகம். ரொம்ப ரொம்ப நல்ல கலாச்சாரம். இதை பார்த்தாவது தங்கள் எதிர்க்காலத்தைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காத ரசிகர்கள், படிக்கும் மாணவர்கள் இளைஞர்கள் இனிமேலாவது கொஞ்சம் சிந்திக்கவும், வேண்டும், மாறவும் வேண்டும்


ஆரூர் ரங்
மார் 24, 2025 14:16

மனமுவந்து பிரிந்து...ஒரே காரில் திரும்பிச் சென்றனர். ஹாஹா.


ديفيد رافائيل
மார் 24, 2025 13:43

இந்த மாதிரி news, போடுறதால யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட போறதில்லை. பத்திரிக்கையில் news வரனும்னு இந்த தருதலைங்க இப்படி பண்ணுதுங்க. இதனால் நாட்டில் வளர்ச்சி பாதிக்காது


முக்கிய வீடியோ