வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த செய்தியால் யாருக்கு பலன்?
தற்போது இங்கு பாமக, விசிக, தேமுதிக, மதிமுக , ஏன் அண்ணாதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஒரு ஆழமான பிடிப்பு கொண்ட கொள்கை இல்லை. கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நல்ல நிர்வாகிகள் இல்லை. கட்சியை வளர்ப்பதற்குண்டான திட்டங்கள் இல்லை. எல்லோரையும் அரவணைத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள நல்ல தலைமை பண்பு உள்ளவர்கள் இல்லை. எனவே கீழ்மட்டத்தில் உழைக்கக்கூடிய தொண்டர்களும் இல்லை. ஆனால் ஆட்சி மட்டும் வேண்டும். ஆட்சியில் பங்கு பேரே வேண்டும் . திமுக வை வீழ்த்த வேண்டும் , ஆனால் ஒன்றிணைய மாட்டோம் என்ற கொள்கையில் அண்ணாதிமுக இருப்பது அந்த கட்சியின் வீழ்ச்சிக்கு வித்திடுகிறது. ராமதாஸ் அண்ணாதிமுகாவுடன் கூட்டணியை விரும்பினார் என்று வெளியில் அவரே சொல்லிவிட்டார். தற்போது பாஜக வுடன் கூட்டணி போட்டாச்சல்லவா. எல்லோரும் வேண்டும் என்றால் ஈகோ பார்க்காமல் எடப்பாடி தனது ஆட்களை பாஜக ஆட்களுடன் விட்டு ராமதாஸுடன் பேசச்சொல்லலாம் அல்லவா ? அப்படி என்ன வீராப்பு ? தற்போது பன்னீர்செல்வம் தலைவராக அண்ணாதிமுகாவுக்கு இருந்தால் கண்டிப்பாக அவரே சென்றிருப்பார். ஈகோ பார்க்கமாட்டார். பாஜக தலைமையும் அப்படிதான் நினைக்கிறது. எங்கே அண்ணாதிமுக கூட்டணி வலுபெற்றுவிடுமோ என்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அவர்களின் சார்புநிலை ஊடகங்கள் , ஆதரவாளர்கள் இங்கே பயத்துடன் இருக்கின்றன. ஆனால் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் பாஜகவை விமர்சனம் பண்ணுவதும் அதை திட்டுவதும் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.
2021 முதல் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியும் இல்லை.
பாமக கட்சி கலைக்கப்பட்டது இதுதான் தமிழகத்திற்கு நல்ல செய்தி ஜி. கே .மணி அவர்களே
பாமக கட்சி இரண்டாகப் பிரிந்தது என்று வேணா நல்ல செய்தி வரும்
அவர் நினைப்பது அவர் இருக்கும் காலம் வரை தான் பாமக இருக்க வேண்டும் என்று...... ஓஷோ அவர் தொற்றுவைத்த மதத்தை அவரே அழித்தார்... அதுபோல இவரும் நினைக்கிறார் போலும்....