உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!

பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''ஜிஎஸ்டி குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்பு மகிழ்ச்சி. ஜிஎஸ்டி வரி என்கிற அந்த முறையே கைவிடப்பட வேண்டும்'' என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தூய்மை பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நகராட்சிகள், மாநகராட்சிகள், பேருராட்சிகள் மற்றும் ஊரக அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். அவர்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

கைது நடவடிக்கைகள்

தூய்மை பணியாளர்களை குண்டு கட்டாக கைது செய்ததற்கு ஏற்கனவே கண்டித்து இருக்கிறோம். அதேபோல், வலுக்கட்டாயமாக கைது செய்து இருக்க தேவையில்லை. இந்த கைது நடவடிக்கைகள் மட்டுமின்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதை கண்டித்து இருக்கிறோம். அந்த வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதற்கு அரசாணை போட்டது அதிமுக தான்.

அணுகுமுறை

தூய்மை பணியாளர்களின் பிரச்னைக்காக விசிக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்றைக்கு போராட கூடியவர்கள் யாரும் அதிமுக தனியார்மயம் ஆக்கும் போது வாய் திறக்கவில்லை. இது நான் திமுகவுக்காக சொல்லவில்லை. ஏன் இந்த அரசியல். திமுக செய்தால் எதிர்க்க வேண்டும். அதிமுக செய்தால் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பது தான், இங்கு அணுகுமுறையாக இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்தாலும் கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கிறோம். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். இதுவே தீபாவளி பரிசாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மகிழ்ச்சி. எங்களை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி என்கிற அந்த முறையே கைவிடப்பட வேண்டும்.பழைய முறையே நடைமுறையில் இருக்க வேண்டும். நல்ல அறிவிப்புகள் வருமானால் அதை வரவேற்கவும், பாராட்டவும் கடமைப்பட்டு இருக்கிறோம். தேர்தலுக்காக செய்தாலும் அது மக்களுக்கு பயன் தரும் என்றால் அதை வரவேற்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Venkatesan Ramasamay
ஆக 16, 2025 16:04

ஒரு அரசியல் தலைவனோ கிடையாது ... இந்த மீடியாகரங்கதான் நியூஸ் போட்டு வளர்த்துவிடுறாங்க.. இவன் ஒரு ஜால்ரா ... தயவுகூர்ந்து இவனை பத்தியோ .. இவன் முஞ்சியை நியூஸ்ல போடாதீங்க ...


Shivakumar
ஆக 16, 2025 09:30

இவர்களுக்கு மண்டையில் மூளையும் இல்லை சொந்தமா யோசிக்கும் தகுதியும் இல்லை


Son
ஆக 15, 2025 22:45

சட்டம் கொண்டு வந்த பிறகு மகிழ்ச்சி அடைவதில் அர்த்தம் இருக்கிறது. வெறும் அறிவிப்புக்கே மகிழ்ச்சியா? எடப்பாடியாரே இதுவரை இதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததாக தெரியவில்லையே? ரொம்பத்தான் குழப்பமான மன நிலையில இருக்கீங்க போலிருக்கு?


Davamani Arumuga Gounder
ஆக 15, 2025 21:02

உமக்கு கை, கால் இல்லையா ?உழைச்சு சம்பாரி, இல்லைனா உன்னோட அப்பாவிடம் கேளேன்


Srinivasan Venkatesan
ஆக 16, 2025 08:11

Super reply


MARUTHU PANDIAR
ஆக 15, 2025 20:25

ஜிஎஸ்டி யே கூடாதாம். ஆஹா என்ன ஒரு தீர்க்கம். ஜிஎஸ்டி யை விட்டு விட்டு பழைய கமிஷன் காலத்துக்குப் போகணும்னு ஆச போல இருக்கு அப்படீங்கறாங்க


திகழ்ஓவியன்
ஆக 15, 2025 19:50

இன்று டெல்லியில் திருமா ரவிக்குமார் பார்லிமென்டில் முழக்கம் , கட்சிக்கு ஒரு அங்கீகாரம் இங்கு சட்டசபையில் 4 MLA இது எப்படி சாத்தியம் , ,


திகழ்ஓவியன்
ஆக 15, 2025 19:39

என்ன செய்வது மோடி கொடுத்த 15 L இன்னும் நாங்கள் செலவு செய்யவில்லை இன்று இப்படி அறிவிப்பு


தமிழ் மைந்தன்
ஆக 15, 2025 20:14

உனக்கு கொடுக்க ஐ் எஸ் ஐ் எஸ உள்ளது


Pandi Muni
ஆக 15, 2025 22:18

இரு இரு இன்னும் கருணாநிதி சொத்தையெல்லாம் கையகப்படுத்தல. தலைக்கு 25L கிடைக்கும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 15, 2025 23:27

கலைஞர் கொடுத்த ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கா


madhumohan
ஆக 15, 2025 18:14

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக VCK போராட்டக்களத்திற்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது


V K
ஆக 15, 2025 16:41

வாங்கின காசுக்கு ஏற்ற மாதிரி கூவி தானே ஆகணும்


D.Ambujavalli
ஆக 15, 2025 16:28

ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாமலும் இருக்கணும் என்று எதற்கு இந்த அறிக்கை? எப்படியோ, மோடிஜி அறிவிப்புக்கு ஒரு பாராட்டு பதிவு செய்துவிட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை