உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒத்திசைவு பட்டியல் அதிகாரம்: மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஒத்திசைவு பட்டியல் அதிகாரம்: மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாநில மொழிகள், கலாசாரங்களை அழிக்க பார்க்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.மாநில சுயாட்சி ஏன் தேவை? என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநில அரசுகளை அதிகாரமற்றவைகளாக மாற்றி அதனை சட்டமியற்றும் தகுதியற்றவைகளாக தகுதியை குறைத்து, சொன்னதை செய்யும் கிளிப் பிள்ளையாக மாற்ற நினைக்கிறது மத்திய பா.ஜ., அரசு. கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திசைவு பட்டியல் அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அதிகாரங்களாக மாற்றி விட்டது.மாநில அமைப்பை காப்பதே மக்களை காக்கும் என்பதால் மாநில சுயாட்சி முழக்கத்தை தி.மு.க., ஓங்கி ஒலிக்கிறது. மாநில சுயாட்சிக்காக கருணாநிதி குரல் எழுப்பிய காலத்தை விட இன்றைய காலம் மிக மிக மோசமான காலமாகும். அன்று ஒரு சில அதிகாரங்களே பறிக்கப் பட்டன; இன்று மத்திய அரசு, மாநில அரசுகளை முடக்கப்பார்க்கிறது. மாநில மொழிகள், கலாசாரங்களை அழிக்கப்பார்க்கின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

பகல் கனவு
ஏப் 18, 2025 06:40

திமுகவில் இன்று முதல் யாருமே ஊழல் செய்ய மாட்டோம் என்று அன்னை துர்கா ஸ்டாலினிடம் சத்தியம் செய்துள்ளார்களாம். மேலும் தமிழ்நாட்டு கடனை முழுவதுமாக அடைக்க உதயநிதி தலைமையில் பாங்க்.


M Ramachandran
ஏப் 17, 2025 20:10

யாருடைய கதை கந்தலாக மாறப்போகிறதென்பாதையும், யார் முட்டு சந்தில் நிற்கப்போகிறார் என்பதையும் இன்னும் ஒரு வருடத்தில் நீங்கள் அறிவீர்கள். இப்போது தமிழக்தில் உள்ள நிலமை நிச்சயம் தீ மு கவிற்கு சாதகமாக இல்லை என்பது எதார்த்தம். ஊழல் தலை விரித்தாடுகிறது கீழ் மட்டத்திலிருந்து அமைச்சர்கள் தலை குடும்பம் வரை தினம் ஊடங்களை முரசொலி தினகரன் மட்டும் படித்து பார்த்து நிலமையை தெளிவு படுத்திக்கொள்ளுஙகள். நடக்க போவது இடை தேர்தல அல்ல. அடித்த பணத்தை வீசி வெற்றி கொள்ள.


V Venkatachalam
ஏப் 17, 2025 19:28

இதுல கூட பாருங்க. முதல்வர் கையில் பேப்பர் வச்சிகிட்டு ஸ்டைலாக படிக்கிறார்.. முதலமைச்சர் நாற்காலிக்கே இவரால் சிறுமை.


theruvasagan
ஏப் 17, 2025 17:45

அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று வீரவசனம் பேசினவனுக அன்றைய மத்திய அரசு ஒரு மிரட்டு போட்டதும் பயந்து பதறிப்போய் திராவிடநாட்டு கொள்கையை சுடுகாட்டுக்கு அனுப்பிட்டு பம்மிக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்கள். அந்த வரலாற்றை மீண்டும் நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை இப்போது உருவாகி வருகிறது.


S.V.Srinivasan
ஏப் 18, 2025 13:48

மத்தியில் இப்போதுள்ள அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்று இவர்களுக்கு தெரியும். அதற்கு உதாரணமாக நிறைய சம்பவங்களை சொல்லலாம். மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற தைரியத்தில்தான் இவர் வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டு திரிகிறார்.


Apposthalan samlin
ஏப் 17, 2025 17:35

தனி தமிழ் நாடு ஆகாமல் விடாது போல மத்திய அரசு இப்பொழுதே 1 ருபாய் கொடுத்தால் 29 பைசா தான் திருப்பி தருகிறது . இந்தியா அரசுடன் இணைந்து இருப்பதால் என்ன லாபம் மக்களுக்கு


Kjp
ஏப் 17, 2025 18:15

ஒரு ரூபாயில் மத்திய அரசுக்கு ஐம்பது பைசா மாநில அரசுக்கு ஐம்பது பைசா. மாநில அரசுக்கு சேர வேணடிய ஐம்பது பைசா முதலில் மாநில அரசுக்கு வந்து விடுகிறது.மத்திய அரசின் பங்கில் இருந்து தான் 29 பைசா வருகிறது.இதை மத்திய நிதி அமைச்சர் விளக்கம் கொடுத்தும் திரும்ப திரும்ப 29 பைசா என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.


ஆரூர் ரங்
ஏப் 17, 2025 17:17

21 ஆம் பக்கத்தில் என்ன விதமான கலாச்சாரம் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது


Mario
ஏப் 17, 2025 17:04

மகாராஷ்டிராவில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம்- புதிய தேசிய கொள்கையின் நிஜமுகம் அம்பலம்


ஆரூர் ரங்
ஏப் 17, 2025 17:17

நிறைய உருது பள்ளிகள், அரபி மதரசாக்கள் அங்குள்ளன. அவற்றில் மராத்தி பாடம் கட்டாயமில்லை என்கிறார்கள்.


தமிழ்வேள்
ஏப் 17, 2025 14:53

இயல் தமிழை நாசமாக்கி நாத்திகத்தமிழ் நாராச தமிழ் ஆக்கிய திருவிளையாடல் இவருடைய அப்பாவுடையது ....


Madras Madra
ஏப் 17, 2025 14:18

இவருக்கு ஊழல் வழக்கில் இன்னும் நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க தமிழக விடுதலை போராட்டம் வெடிக்கும் தனி ராணுவம் அமைத்து போராடுவார் இவர் வீரத்தை கண்டு உலகமே மூக்கில் விரல், இல்லை மொத்த கையையும் வைத்து வியந்து வாய் பொளக்க போகுது


Suppan
ஏப் 17, 2025 14:17

கலாச்சாரக்குலைவை பெரிய அளவில் ஆரம்பித்து வைத்தது ராம் சாமி கும்பல். கட்டுக்கதைகளை மாணவர்களுக்கு கற்பிக்காதீர்கள் என்கிறார்.