உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டு கணக்கு ஆரம்பமா? தி.மு.க. அமைச்சரின் பரிசுப்பொருள் விநியோகம் சமூக வலைதளங்களில் வைரல்

ஓட்டு கணக்கு ஆரம்பமா? தி.மு.க. அமைச்சரின் பரிசுப்பொருள் விநியோகம் சமூக வலைதளங்களில் வைரல்

தஞ்சாவூர்: வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., “மக்களை காப்போம், தமிழத்தை மீட்போம்” என்ற பயணத்தைத் தொடங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். தி.மு.க., “ஒரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்தை தொடங்கி, வார்டு வார்டாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இடையில், தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வாட்ச், குடை, மொபைல், பேனா என கிப்ட் பொருள்களை வழங்கி உள்ளனர்.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் செழியனின் படத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சில்வர் ட்ரம் மற்றும் சேலை ஆகியவை, திருவிடைமருதூர் தொகுதியில் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றன.இது தொடர்பாக, அ.தி.மு.க., த.வெ.க., கட்சியினர், சமூக வலைதளங்களில், “2026 தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களை கவரும் நோக்கில் தி.மு.க. முயற்சி மேற்கொள்கிறது. அமைச்சராகிய செழியன் இதுபோன்ற விநியோக நடவடிக்கைகளை விட்டு விட்டு, நெசவுத் தொழிலாளர்களுக்கான நிலையான வேலை வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தேர்தலில் தோல்வியடையப் போவதற்கான பயத்தில் இந்த நடவடிக்கையைத் துவங்கியுள்ளார்” என விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அமைச்சர் செழியனின் படத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டிய சில்வர் ட்ரம் மற்றும் சேலை வழங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kannan
ஜூலை 31, 2025 04:47

வாங்கினவர்கள் மீது திமுக பேரில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.


Chess Player
ஜூலை 30, 2025 21:54

தயவுசெய்து அனைவரும் வரிசையில் நின்று அந்த இலவசப் பொருட்களைப் பெறுங்கள். அது மிகவும் முக்கியம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தெருக்களில் விடப்படட்டும். நம் மாநிலம் எப்படி அழியும் என்பது முக்கியமல்ல, நமக்கு இலவசப் பொருட்கள் மட்டுமே தேவை. அந்த இலவசப் பொருட்களைப் பெற்று வெட்கமின்றி வாக்களிப்போம். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.


metturaan
ஜூலை 30, 2025 20:31

கொடுத்து கெடுத்துட்டான் அரசியல் வியாதி..‌... வாங்கி பழகிட்டான் வாக்காளன்....இவை இல்லாமல் எப்போது நடக்குமோ தேர்தல் ...? சவக்குழிக்குள் ஜனநாயகம் போய் ரொம்ப நாள் ஆச்சு


panneer selvam
ஜூலை 30, 2025 16:28

In Madurai area , land registration minister Murthy has already started . Heavy gifts were distributed to DMK functionaries


Ramesh Sargam
ஜூலை 30, 2025 13:13

திமுக ரொம்பவே பயந்து போயிருக்கிறார்கள். இப்பவே இலவசங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இலவசங்கள் கொடுக்காமல் திமுகவால் ஒரு தேர்தலில் கூட வெற்றிபெற முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை