உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்துவரி ரசீதுக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்! வசமாக சிக்கிய பில் கலெக்டர்

சொத்துவரி ரசீதுக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்! வசமாக சிக்கிய பில் கலெக்டர்

சேலம்: சேலம் மாவட்டத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.தீபாவளி நேரம் என்பதால் அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும். இதையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆங்காங்கே அதிரடி ரெய்டு, கைது என நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக பில் கலெக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு; மிட்டாபுதூரைச் சேர்ந்தவர் ராஜூ. இவர் தமது புதிய வீட்டுக்கு சொத்துவரி ரசீது வேண்டி அஸ்தம்பட்டியில் உள்ள மண்டல அலுவலகத்தில் ஆவணங்களுடன் விண்ணப்பித்து இருந்தார். அவரது ஆவணங்களை சரிபார்த்த அங்குள்ள பில் கலெக்டர் ராஜா என்பவர், ரூ.35 ஆயிரம் லஞ்சம் தந்தால் சொத்துவரி ரசீது தருவதாக கூறி உள்ளார்.அவரின் பேரத்தை விரும்பாத ராஜூ, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, உஷாரான போலீசார், ராஜாவை கையும், களவுமாக பிடிக்க எண்ணினார். அதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜூவிடம் கொடுத்து, அதை பில் கலெக்டர் ராஜாவிடம் தருமாறு கூறினார். அவரும் போலீசாரின் அறிவுறுத்தல்படி ரசாயன ரூபாய் நோட்டுகளை தர, அதை வாங்கும்போது மறைந்திருந்த போலீசார் ராஜாவை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ADVOCATE DALIT PRAVINA G MBBS BL
அக் 29, 2024 17:38

பணம் மற்றும் பல அரசியல் காரணங்களுக்காக சொத்து வரி முடக்கப்படுகிறது.... இந்திய பிரதமர் மோடியின் சர்வாதிகார அரசியல் வேட்டைகள் சூழ்ச்சிகள் சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் வரை பாய்கிறது என்பது ஏற்கனவே என்னை பாதித்து வரும் வீட்டு வரி ரசீது பிரச்சனை என்பது எனது சுய அனுபவம் வழக்கறிஞர் தலித் பிரவீணா MBBS BL President ஆல் இண்டியா தலித் சமாஜ் மற்றும் தமிழ் முன்னேற்ற கழகம்


P Elumalai
அக் 29, 2024 08:02

பொதுமக்கள் பார்வைக்கு கருவறையில் இருந்து கல்லறை போகும் வரை எங்கு லஞ்சம் இல்லை என்று சொல்லவும்.அனைத்து துறைகளிலும் மிஞ்சி இருப்பது லஞ்சம் .இதற்கு அரசு முறைகேடுகளை தடுக்க எடுத்த கைதுகளே சாட்சிகளாகும்.


P Elumalai
அக் 29, 2024 07:56

காலை வணக்கம் லஞ்சம் இல்லாத இடமிருந்தால் கூறுங்கள் குழந்தை பிறக்கும் இடத்திலிருந்து கடைசியாக மறையும் சுடுகாடு /இடுகாடு வரைவரைகருவறையில் இருந்து கல்லறை வரை லஞ்சம் இல்லாத இடங்களே இல்லை.


Shunmugham Selavali
அக் 28, 2024 22:19

முச்சந்தியில் நிற்க்கவைத்து செருப்பால் அடிக்க வேண்டும். குடும்ப சொத்துக்களை ஏலம்விட வேண்டும்.


karthik
அக் 28, 2024 20:07

ivanugalam thookula podunga...lanjam lanjam lanjam


Ramesh Sargam
அக் 28, 2024 19:56

மூன்று லட்சம், முப்பது லட்சம், கோடிகளில் லஞ்சம் வாங்குபவர்களை என்று பிடிப்பீர்கள்? அந்த பெரிய மீன்களை பிடிக்க வலை தயாரிக்கவில்லையா?


Raghavan
அக் 28, 2024 21:55

கோடி கோடியாக வாங்குபவர்களுக்கு என்றே இருக்கிறார் ஒரு ஆபத்பாந்தவன் திரு கபில் சிபல் போன்றோர். காசைக்கொடுத்து நீதியை வாங்கலாம் என்பது ஆகிவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை