உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு

உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தமிழில் பெயர் வையுங்கள்,'' என சென்னையில் நடந்த திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.முதல்வர் ஸ்டாலினின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு 72 ஜோடிகளுக்கு திருமண நடத்தி வைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்ஜ், டிவி,பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.பிறகு உதயநிதி பேசியதாவது: மணமக்களுக்கு ஒரே வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொள்ளாதீர்கள். அதிலேயும் மத்திய அரசு பார்த்துக் கொண்டு உள்ளது.மத்திய அரசு குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தியது. மக்கள் தொகை அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்த வேண்டும் என சொன்னது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழகம். அதற்காக தண்டிக்கப்படுகிறோம். தொகுதி மறுவரையறையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதை பற்றி தான் 10 நாட்களாக தலைவர்கள் பேசிக் கொண்டு உள்ளனர்.தமிழகத்தில் தற்போது 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தொகுதி மறுவரையறை வந்தால் எட்டு தொகுதிகள் குறைந்து 31 ஆகி விடும். தமிழக மக்கள் தொகை 7 கோடியாக உள்ளது. குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்யாத, விழிப்புணர்வு ஏற்படாத மாநிலங்கள் பலனடைய போகின்றன. வட மாநிலங்களில் 100 தொகுதிகள் கூடுதலாக பெறும். தொகுதிகள் குறைந்தால், நம்முடைய உரிமைகளை பெற முடியாது. மணமக்கள் படித்தவர்கள். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தமிழில் பெயர் வையுங்கள். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Venkataraman
மார் 27, 2025 13:50

இந்த ஆள் சொல்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை. இந்த பைத்தியங்கள் சொல்வதை கேட்டு நடந்தால் ஊர் நாசமாகி விடும்.


V K
மார் 14, 2025 05:40

இவன் தொழிலுக்கு ஆபத்து வரும் என்ற உடன் அடுத்தவன் குழந்தை பெற்று கொள்ள வேண்டும்


Rajasekar Jayaraman
மார் 13, 2025 15:25

இல்லன்னா ஆபத்து திருட்டு கொள்ளை கூட்ட திராவிடத்தால்.


அருண், சென்னை
மார் 13, 2025 09:36

கொத்தடிமைகள் தலை கம்மியா இருக்கு...பேருக்கவேண்டும் ஜனத்தொகையை மேலும், திமுக 200 உபீஸ், முட்டூஸ், நிரந்திர கொத்தடிமைகள் தேவை...


D.Ambujavalli
மார் 13, 2025 07:00

எப்படி, ஸ்டாலின், நெப்போலியன் என்று ‘செந்தமிழில்’ வைக்கலாமா? முதலில் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துபோட்டுவிட்டு அடுத்தவனுக்கு அறிவுரை கூறுங்கள் பெற்ற பிள்ளைகளுக்கே உங்களது போன்ற கார்பொரேட் பள்ளிகளில் சேர்த்தால்தான் பல மொழிகள் கற்று மேல்நாட்டுக்கு உங்கள் மகனை நீங்கள் அனுப்பியதுபோல் படிக்க வைக்க முடியும். தமிழைக்கூட நன்கு கற்பிக்காத பள்ளிகளின் படித்துவிட்டு எழுத்துக்கூட்டிக் கூடப் படிக்காமல் உங்களுக்கு போஸ்டர் ஓட்டவேண்டும் நிலை . இதில் அடுக்காக்கப்பெற்று டாஸ்மாக் வர்த்தகத்தைத்தான் பேருக்கு முடியும்


orange தமிழன்
மார் 13, 2025 06:56

இவரை பற்றி பதிவு இடுவதே நமக்கு இழுக்கு........( நம் எண்ணத்தை தெரிய படுத்தவே இந்த பதிவு)


கோமாளி
மார் 13, 2025 06:42

கோமாளி


ப.சாமி
மார் 13, 2025 05:50

பாராளுமன்ற எண்ணிக்கை குறையும் என்று சொல்லி குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது அபத்தமானது. குழந்தை பிறப்பு வளர்ப்பு படிப்பு வேலை வாய்ப்பு இவற்றை எல்லாம் யார் கணிப்பது..?


எவர்கிங்
மார் 13, 2025 04:04

அடுத்தவாரம் முதல் ரிப்பேரான சீர் வரிசை பொருட்கள் பிரிட்ஜ் டீவி வாஷிங்மிஷினுக்காக அலையவே நேரம் சரியாக இருக்கும்


எவர்கிங்
மார் 13, 2025 04:01

ராமசாமி வழியிலா?


புதிய வீடியோ