உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றி மாற்றி பேசுவதில் அண்ணாமலைக்கு நிகர் அவரே

மாற்றி மாற்றி பேசுவதில் அண்ணாமலைக்கு நிகர் அவரே

கோவை : ''மாற்றி மாற்றிப் பேசுவதில், அண்ணாமலைக்கு நிகர் அவரே,'' என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x5n7auw9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: கோடைக் காலத்தில் மின்தேவையை சமாளிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவையை விட கூடுதலாக மின்சாரம் இருக்கிறது. கூடுதலாக தேவைப்பட்டால் 'டெண்டர்' கோரி, உடனுக்குடன் மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.வெப்பம் காரணமாக, எங்காவது ஓரிடத்தில் மின்தடை ஏற்பட்டு இருக்கலாம். மின் பழுது ஏற்பட்டால், சீரமைப்பதற்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2030 வரை எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை கணக்கெடுத்து, அதற்கான முன்னெடுப்புகளை துவக்கியுள்ளோம்.மதுவிலக்கு சம்பந்தமாக, 2023, 2024ல் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ இருக்கிறது. 2023ல் பேசியபோது, 'மதுவிலக்கு சாத்தியமில்லை; 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு போய்விடும்' என்றார். 2024ல் பேசிய போது, 'நாங்கள் ஜெயித்து விட்டால் மதுவிலக்கு வரும்; கடைகளை மூடி விடுவோம்' என்று கூறினார். இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதில் அண்ணாமலைக்கு நிகர் அவரே. எல்லா விஷயங்களிலும் இப்படித்தான் பேசி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAMESH
மார் 23, 2025 22:43

ஊழல் ஊழல் ஊழல்..... ஓட்டுக்கு பணம்....பல கட்சி தாவும் பேர்வழி.... தகுதி இல்லை அண்ணாமலை அவர்களை பற்றி பேச....பத்து ரூபா வசூல் செய்யும் நபர்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மார் 23, 2025 13:13

அண்ணாமலை அவர்கள் பற்றி பேச கூட தகுதியற்ற ஊழல் பெருச்சாளி.


Venkatesh
மார் 23, 2025 11:02

பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கி பிழைப்பு நடத்தும் மானங்கெட்ட ஆட்களெல்லாம் அண்ணாமலை பற்றி பேசும் தகுதி அற்றவர்கள்... இன்னும் எத்தனை நாட்கள் இப்படி கூச்சமே இல்லாமல் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள் என்று பார்க்கலாம்


Bala
மார் 23, 2025 10:31

ஜாமீனில் இருக்கும் ஊழல் பெருச்சாளி அணிலுக்கு வீர தமிழ் சிங்கம் அண்ணாமலை அவர்களை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை


Balaa
மார் 23, 2025 10:04

உத்தமபுத்திரன் சொல்கிறார்.


Balaa
மார் 23, 2025 08:32

உண்மை. மதுவிலக்கு சாத்தியமில்லை. அது பல பிரச்னைகளை வளர்க்கும். ஆனால் மது கிடைப்பதை கட்டு படுத்தலாம். சில வெளிநாடுகளை போல் நேர்மையான முறையில் விற்கலாம். தவறு செய்தால் கடுமையான தண்டனை விதிக்கலாம்.


shyamnats
மார் 23, 2025 08:28

இப்போதைய கேள்வி, மதுவிலக்கு வேண்டுமா, வேண்டாமா என்பதில்லை, மது விற்பனையில் கொள்ளை அடிக்கலாமா கூடாதா என்பதுதான். ஒருவர் நிரபராதி என அறிவிக்க படாத போது அரசு பதவியில் எப்படி தொடரலாம் ? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்


நிக்கோல்தாம்சன்
மார் 23, 2025 08:15

நெஞ்சு வலிப்பதாக மாற்றி மாற்றி பிடித்து அழுத ஒருத்தர் கூறுவதை நம்ப வேண்டும்?


சமீபத்திய செய்தி