உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளுக்கு நடக்கும் பாராட்டு விழாவை புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் முடிவு

பள்ளிகளுக்கு நடக்கும் பாராட்டு விழாவை புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொதுத்தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட உள்ள பாராட்டு விழாவை புறக்கணிக்க, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.

விபரம் சேகரிப்பு

இதற்காக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.அதேவேளை, தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது விசாரணையும் நடத்தப்பட உள்ளது. மேலும், அந்த பள்ளிகளுக்கு, மாவட்ட கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகள் சென்று, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.இதனால், இந்தாண்டு முழு தேர்ச்சி அடைந்த பள்ளிகள், அடுத்தாண்டு இதே நிலையை தொடருமா என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், இந்தாண்டு பாராட்டு விழாவில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்களும், பாட ஆசிரியர்களும், அடுத்தாண்டு விசாரணை வளையத்துக்குள் வரும் வாய்ப்பு உள்ளது.

உளவியல் சார்ந்தது

அதனால், நிரந்தரமில்லாத இந்த பாராட்டு விழாவை புறக்கணிக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி என்பது, முழுக்க முழுக்க ஆசிரியர்களை சார்ந்தது அல்ல. அது, பள்ளிகளின் கட்டமைப்பு, மாணவர்களின் குடும்பம் மற்றும் சமூகச்சூழல் மற்றும் உளவியல் சார்ந்தது. அவற்றை களைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணவர்களின் கற்றல் திறன், ஈடுபாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் தேர்ச்சி விகிதம் அமையும் என்ற நிலையில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என நிர்ப்பந்திப்பதும், அது நிகழாதபோது, ஆசிரியர்களை குற்றவாளிகளாக்குவதும் ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ganapathi Amir
ஜூன் 02, 2025 02:19

தான் தோன்றிகளின் பாராட்டும் வசையும் பாதிக்காத வண்ணம் ஆசிரியர்கள் மன உறுதியோடு தங்கள் பணியை செவ்வனே செய்ய வேண்டும் ...


MUTHUKUMARAN P
ஜூன் 01, 2025 12:43

தலைமை ஆசிரியர்களின் முடிவு மிகமிக சரியானது


Pmnr Pmnr
ஜூன் 01, 2025 12:03

ஏன் ஆசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும்


vbs manian
ஜூன் 01, 2025 09:27

பல பள்ளிகளில் கட்டுமான பலவீனம். வகுப்பறை கழிவறை வசதிகள் மோசம். பல வீடுகளில் வறுமை தாண்டவம் ஆடுகின்றது. ஊன்றி படிக்க இயலாத சூழ்நிலை. பள்ளிக்கு செல்வதே பெரும்பாடு. பஸ் வசதி இல்லை. போதுமான ஆசிரியர் இல்லை. பாராட்டு முலாம் பூசப்படுகிறது.


Padmasridharan
ஜூன் 01, 2025 08:08

எந்தெந்த ஆசிரியர்கள் எப்படி நடந்துக்கிறாங்கென்று அவர்களுக்கே தெரியும்.. பிள்ளைகளுக்கு அறிவிருந்தும் அறிவில்லாமல் வளர்க்கும் சிலரால் பள்ளிக்கூடத்திற்கே இழிவு ஏற்படுத்துகின்றனர். As a Teacher Trainee seen whats happening in government schools


உண்மை கசக்கும்
ஜூன் 01, 2025 07:20

நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் விஜய் பாராட்டுவதை பார்த்து விட்டு, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்த அரசு கோமாளித்தனமாக செய்கிறது. ஆனால் ஒன்று. இப்படி பாராடுவதை விட நல்ல மதிப்பெண் எடுக்காத மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க முயற்சி எடுத்தால் சிறப்பு. தற்கொலை எண்ணிக்கை குறையும்.


முருகன்
ஜூன் 01, 2025 07:04

இந்த ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகளில் நடப்பது இவர்களுக்கும் இனி நடக்க போகிறது என புரிந்தால் சரி கை நிறைய சம்பளம் சலுகைகள் மட்டும் வேண்டும் வேலை செய்ய கூடாது


Svs Yaadum oore
ஜூன் 01, 2025 06:54

மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசு வாழ்மொழி உத்தரவே போட்டதாம். இப்படி இந்த லட்சணத்தில் இருக்கும்போதே தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளிள். அப்ப இவ்வளவு கேவலமாக நடக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகள் மீது எவன் நோட்டீஸ் கொடுப்பது?? ...


Siva Balan
ஜூன் 01, 2025 05:48

மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசு வாழ்மொழி உத்தரவே போட்டது. பாவம் ஆசிரியர்களும் மாணவர்களும்.


R Dhasarathan
ஜூன் 01, 2025 05:31

குரு நிந்தனை குல நாசம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர் நலம் மிகவும் அவசியமாகும். மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து நடக்க வேண்டும்.


முக்கிய வீடியோ