உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு வெடித்து கொண்டாட்டம் சுகாதார நிலையங்கள் அெலர்ட்

பட்டாசு வெடித்து கொண்டாட்டம் சுகாதார நிலையங்கள் அெலர்ட்

சென்னை: தமிழகத்தில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தயார் நிலையில் இருக்கும்படி, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்திஉள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தீபாவளி பண்டிகையின்போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து, மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டர்கள் பணியில் இருப்பது அவசியம். தமிழகத்தில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டால், nic.inஎன்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அத்துடன், மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகிய எண்களில் தகவல் அளிப்பது அவசியம். அத்துடன், இன்றும் நாளையும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில், டாக்டர்கள் அருகில் இருக்க வேண்டும். அதேபோல், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ