உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆக., 2ல் மாநிலம் முழுதும் துவக்கம்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆக., 2ல் மாநிலம் முழுதும் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், ஆகஸ்ட் 2ல் மாநிலம் முழுதும் துவக்கப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் மற்றும் முதல்வர் காப்பீடு திட்ட அட்டை பெற முடியும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூர், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், ஆகஸ்ட் 2ல், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் துவக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை, முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலனை பாதுகாத்திடும் வகையில், மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக தனியார் மருத்துவமனைகளில், 15,000 ரூபாய் வரையிலும், அரசு மருத்துவமனைகளில், 4,000 ரூபாய் வரையிலும், செலவிட்டு வருகின்றனர். எனவே, அனைத்து தரப்பு மக்களுக்கும், இலவசமாக முழு உடல் பரிசோதனை திட்டம் துவக்கப்பட உள்ளது. இத்திட்டம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை, பகுதி வாரியாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, துண்டு பிரசுரங்கள் வாயிலாக, அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்படும். இதில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் இந்திய மருத்துவ முறை உள்ளிட்டவை அடங்கும். மேலும், கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்று நோய் போன்றவற்றை கண்டறிந்து, சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும். இதே முகாமில், மாற்றத்திறனாளிகள் பரிசோதிக்கப்பட்டு, எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான சான்றிதழும் வழங்கப்படும். புதிய காப்பீடு திட்டத்தில் இணைவதற்கும், முகாமில் விண்ணப்பிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக மாநிலம் முழுதும், 1,256 முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Raj Digitastudio 73
ஜூலை 30, 2025 07:58

No message


Rajasekar Jayaraman
ஜூலை 28, 2025 22:42

திருட்டு திராவிட குடும்ப நல்லதைப்பற்றி புதுசா சொல்லுகிறார் உங்கள் தாரக மந்திரமே 1967 முதல் அதுதானே புதிதாக சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம்.


N Srinivasan
ஜூலை 28, 2025 13:31

இது வரை இந்த ஆட்சி எத்தனை திட்டங்களை கொண்டு வந்துள்ளது ? நீங்க நலமா? உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், வாழுந்து காட்டுவோம்.......அப்பப்பப்பா .... எத்தணை திட்டங்கள் ........


M Ramachandran
ஜூலை 28, 2025 11:33

அரசியல் நாணய மற்ற திருட்டு கும்பல் செய்யும் காரியாத்தை தானே செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்க பொய் பித்தலாட்டா கதை எதற்கு?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 28, 2025 11:20

முறைகேடான மழலைகள் , கிட்னி ..பரிமாற்றம் இப்போது தமிழ் நாட்டில் சூடுபிடித்துளளது ... 2026 தேர்தல் அறிக்கையில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு நியாய விலையும் ..முறைகேடான கிட்னி வியாபாரம் முறைப்படுத்தப்பட்டு ..கின்டனி விற்பனையில் இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு நியாய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சேருங்கள் ..வாக்குகள் அள்ளும் ..


ராமகிருஷ்ணன்
ஜூலை 28, 2025 11:02

தேர்தல் கால தகிடுதத்த டூபாகூர் தில்லாலங்கடி திட்டம். மக்கள் நம்ப மாட்டார்கள்


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 28, 2025 09:24

இன்னும் ஒரு கட்சி காரணும் அரசு ஆஸ்பத்திரிக்கு போரதில்லை. முதல்ல அத சரி பண்ணு


vbs manian
ஜூலை 28, 2025 09:18

எதற்கு அந்த பெயர். இது ஒரு அரசு திட்டம் கட்சி பிரச்சாரம் இல்லை.


கௌதம்
ஜூலை 28, 2025 07:59

உங்களுடன் ஸ்டாலின் னு 250கோடிக்கு விளம்பரம் பன்றீங்க... இப்ப இது... இதுக்கு எத்தனை கோடி? இவை எல்லாம் ஆங்காங்கே இருக்கும் இ-சேவை மையத்தில் செய்தாலே போதுமானது... தேவை இல்லாமல் மக்கள் வரிப்பணத்தை உங்கள் சுயதம்பட்டம் அடிக்க வீண் அடிக்க வேண்டியது... வேறு எதாவது பயனுள்ள திட்டத்தை மக்கள் கேட்டால் நிதி இல்லை னு ஓட வேண்டியது... என்ன ஒரு விஞ்ஞான அரசியல்


c.mohanraj raj
ஜூலை 28, 2025 07:59

என்னமோ ஸ்டாலின் வீட்டு பணத்தில் செயல்படுத்துவது போல் அல்லவா செய்கின்றீர்கள்