உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிடம் என்ற சொல்லை கேட்டால் சிலருக்கு அச்சம்: முதல்வர் ஸ்டாலின்

திராவிடம் என்ற சொல்லை கேட்டால் சிலருக்கு அச்சம்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அமைச்சர் பொன்முடி எழுதிய திராவிடர் இயக்கமும், கருப்பர் இயக்கமும் என்ற புத்தகத்தை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் நூல் வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. பழமைவாத கருத்துகளுக்கு எதிராக முற்போக்கு கருத்துகளை முன்வைக்கிறோம். அடிமைதனத்தை ஒழிக்க உருவாக்கப்பட்டது தான் திராவிட இயக்கம். திராவிட நல் திருநாடு என பாடினால் நாக்கு தீட்டாகிவிடுமா?மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னேற திராவிட இயக்கம் தான் காரணம்.திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கு சம நீதி சமூக நீதியை உறுதி செய்யும்.எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல். அனைத்து துறை அனைத்து மாவட்ட வளர்ச்சியோடு அனைத்து சமூக வளர்ச்சி இருக்க வேண்டும். திராவிடம் என்பது ஒரு காலத்தில் இடப்பெயர், மொழிப்பெயராக இருந்தது. இப்போது அரசியல் பெயராக மாறி உள்ளது.திராவிடம் என்ற சொல்லை கேட்டால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

என்றும் இந்தியன்
அக் 28, 2024 17:43

தமிழ்நாடு திராவிட நாடு என்று பெயர் மாற்றம் ஸ்டாலின் ஆட்சியில்


sundarsvpr
அக் 26, 2024 15:20

ஆன்மிகத்தில் இறை வழிபாட்டில் திராவிட சிசு என்று ஒருவர் போற்றப்பட்டார். இவரின் ஆன்மிக பணியினை போற்றும் நினைவாக ஸ்டாலின் திராவிட மாடல் என்று வைத்துள்ளார். தனிப்பட்ட விருப்பில் வைத்துள்ளார். ஸ்டாலின் இந்து மத விரோதி அல்ல. அவருடைய கட்சியில் 75% ஹிந்துக்கள் உள்ளனர் என்று கூறியது அவர் ஹிந்து மத விரோதியில்லை என்பதை காட்ட. உதயநிதி தலைமை அமைச்சர் ஆகும் நிலை ஏற்பட்டால் கட்சியில் சலசலப்பு உண்டாக வாய்ப்பு இருக்கும். தவிர்க்க இயலாது. இவர் ஹிந்து மதத்தை தவிர்த்து வேறு நாட்டு மதம் மாறியவர் என்பதால்.


M Khan
அக் 26, 2024 14:09

He is Dravida model Entertainer


ManiK
அக் 26, 2024 13:55

மத்திய அரசு ஒருமுறைகூட சாட்டையை எடுக்கவில்லை... அதுக்குள்ள இந்த ஆளு வலிக்குதுன்னு கூவராரு..?!!


Pandi Muni
அக் 26, 2024 13:06

தமிழகத்தை கொள்ளையடிக்க மொகலாயன் வந்தான் இப்போ திராவிடன் வந்திருக்கான் சீக்கிரமே துரத்தியடிப்பான் தமிழன்


சகுரா
அக் 26, 2024 12:05

திராவிடம் என்றால் பிரிவினைவாதம்


raja
அக் 26, 2024 11:55

அச்சம் இல்லை மங்குனி முதல்வரே இல்லாதை ஈர வெங்காயத்தை காயவைத்து தோலுரிக்கத்தான் வேண்டும் திராவிடம் மற்ற மூணு மாநிலங்கள் நாங்கள் மலையாளி, தெலுங்கன், கன்னடன் என்கிறார்கள் தமிழகத்தில் மட்டும் திராவிடன் இதில் ஏதாவது நியாயம் இருக்கா மங்குனி முதல்வரே???


venugopal s
அக் 26, 2024 11:50

திராவிடம் என்ற சொல்லுக்கு அதிகமான மதிப்பு இருப்பதைக் கண்டு காண்டு ஆனவர்களின் வயிற்றெரிச்சலால் ஏற்பட்ட கோபம் அது!


ஆரூர் ரங்
அக் 26, 2024 10:42

சாக்கடையை கண்டாலும் திராவிடத்தைக் கேட்டாலும் ஒதுங்கிப்போவது நல்லது.


Dharmavaan
அக் 26, 2024 08:40

திராவிடம் என்பது கொரோன டெங்கு போன்ற விஷக்கிருமிகள அதை அழித்தே ஆக வேண்டும் .பயப்படுவது அதனால் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை