உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 நகரங்களில் வெயில் சதம்

6 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, ஆறு நகரங்களில் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக, மதுரை நகரம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில், 103 டிகிரி பாரன்ஹீட்; அதாவது, 39.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. ஈரோடு, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, தஞ்சை, திருச்சி நகரங்களில் நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேலாக வெப்பம் பதிவானதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை