உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 19 மாவட்டங்களில் நாளை கனமழை

19 மாவட்டங்களில் நாளை கனமழை

சென்னை:மேற்கு திசை காற்று மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால், கோவை, நீலகிரி உள்ளிட்ட, 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அந்த மையம் வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யலாம். நாளை மறுநாளும் கோவை உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. இருப்பினும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை