உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 மாவட்டங்களில் இன்று கனமழை

4 மாவட்டங்களில் இன்று கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், 8; திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, வாலாஜா, சென்னை மாவட்டம் விம்கோ நகர், எண்ணுார், மணலியில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், நாளை இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் மட்டும் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
நவ 08, 2025 08:00

வானிலை அறிக்கை பொய்த்துப்போக வாய்ப்புண்டு. இதற்கு காரணம் வானிலை ஆய்வாளர்களால் கூற இயலுமா? இதனை கூறினால் தான் செய்தியினை மக்கள் நம்புவார்கள்.


புதிய வீடியோ