உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் கனமழை: விமான சேவை பாதிப்பு

சென்னையில் கனமழை: விமான சேவை பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிப்பு அடைந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6tu5dgtz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கனமழையால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு அடைந்ததுமழை காரணமாக மதுரை, தூத்துக்குடி, கொச்சி உள்ளிட்டநகரங்களிலிருந்து சென்னை வந்த பல விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னையிலிருந்து மங்களூரு, கொச்சி செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர் இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, திருப்பூர் தெற்கு, திருப்பத்துார் மாவட்டம் ஆலங்காயம், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், தலா,7; காரைக்கால், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் ஆகிய இடங்களில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வரும், 24 வரை மிதமான மழை தொடரலாம்.தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

duruvasar
செப் 19, 2025 09:13

"விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்" இப்படி இதை ஒரு டெம்ப்லேடாக உபயோகப்படுத்துவதை நிறுத்தவே. மழை காரணமாக விமான பயணிகள் மட்டுமே அல்ல போக்குவரத்து நெரிசலால் பஸ் மற்றும் ரயில் பிடிக்கமுடியாமல் அவஸ்தை படும் மக்களும் இருகிறார்கள். சரியான சாலை, ஒழுக்கமற்ற போக்குவரத்து இவைகளால் தினசரி மக்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருகிறார்கள். எனவே பருவநிலை காரணமாக விமான சேவை தாமதமாகும்பொழுது இப்படி டேம்ப்லடே போடுவதை தவிருங்கள்.


புதிய வீடியோ