உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 மாவட்டங்களில் இன்று கன மழை

6 மாவட்டங்களில் இன்று கன மழை

சென்னை: கோவை, நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 13 செ.மீ., மழை பெய்து உள்ளது. அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா, 12; நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, 11; கோவை மாவட்டம் சின்கோனா, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் தலா, 10 செ.மீ., மழை பெய்துள்ளது.வடமேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு வங்கம், வங்கதேச பகுதிகளில் நேற்று முன்தினம் கரையை கடந்தது.இந்நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், ஜூன் 5 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் இன்று மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 37 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகக் கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ