உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இரு மாவட்டங்களில் இன்று கனமழை

 இரு மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: 'கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், 18 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்று, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில், இடி, மின்னல், பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி, மின்னல், பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல், 13ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், 3 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !