உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊத்தங்கரையில் கனமழை; வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

ஊத்தங்கரையில் கனமழை; வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வாகனங்கள், ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.பெஞ்சல் புயல் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக, ஊத்தங்கரை பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே ஏரி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o0fulh3m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீர், பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்துச் சென்றது. பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள், கார் ஆகியவை இழுத்துச் செல்லப்படும் காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ManiK
டிச 02, 2024 20:15

ஏரி குளம் உடைந்து மைலம, விழுப்பரம் area எல்லாம் துவண்டு இருக்க ஒரு ஆளு சாதாரண மழை பெய்த சென்னையை காப்பாத்திட்டேன்னு தனக்குத்தானே Award கொடுத்துக்கரார்!! எல்லாம் கால கொடுமை.


Jay
டிச 02, 2024 11:46

புயல் காலத்தில் வாகனங்களை மிகவும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டியது அவசியமாகிறது, சென்னையில் இருக்கும் மக்கள் வேளச்சேரி பாலத்தில் கொண்டு போய் வண்டிகளை நிறுத்துவதை போல.


சமீபத்திய செய்தி