வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழக அரசே நீரை கடலுக்கு அனுப்பாமல் இருக்கும் கால்வாய்கள் , ஏரி , குளங்களை நிறைக்க வழி செய்யுங்கள் , விவசாயிகள் உங்களை போற்றுவார்கள்
மழை பெய்து நாடு செழிக்கட்டும்...
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது.காரைக்குடி அருகே பலவான்குடி கண்மாயில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் ஐயாக்கண்ணு, 65, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தங்கமாபட்டி பகுதியில் கனமழையால், தண்டவாளப்பாதையில் இருந்த ஜல்லிக்கற்கள் பெரும் அளவில் அரித்து செல்லப்பட்டது. இதனால் திண்டுக்கல் மற்றும் திருச்சி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜல்லிக்கற்களை ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணி செய்தனர். தற்போது மெதுவாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பொட்டி நாயக்கன்பட்டி ரயில்வே சுரங்க பாதையில் முழுவதும் தண்ணீர் நிரம்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராம மக்கள் பல கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாலாற்றில், கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணைக்கரைப்பட்டி பாலம் அருகே ஆற்றின் நடுவில் உயரழுத்த மின்கம்பம் நடப்பட்டு இருந்தது. ஆற்றில் அடித்து வரப்படும் மரங்கள் மின்கம்பத்தில் சாய்ந்தும், மண் அரிப்பாலும், மின்கம்பம் சாயும் நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு, மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:'டாப்' 20 மழைப்பொழிவு
1. திருப்புவனம் 139 2. ராமேஸ்வரம் 120.8,3. சிவகாசி 122.3,4. தல்லாகுளம் 121 5. பெரிய பட்டி 116 6. மதுரை வடக்கு 110.67. கோவிலங்குளம் 1038. தனியமங்கலம் 989. பொன்னையாறு அணை 97.410. மேட்டுப்பட்டி 96.811. தேவகோட்டை 92 12. புலிப்பட்டி 90.613. மேலூர் 90.2 14. விரகனூர் 80.215. திருச்செங்கோடு 7816.அரூர் 76.6 17. அரியலூர் 73.518. மாயனூர் 7219. இடையபட்டி 72
தல்லாங்குளம்- 121பெரியபட்டி- 116.2மதுரை வடக்கு- 110.6தனியமங்கலம்- 98மேட்டுபட்டி- 96.8புலிபட்டி 90.6மேலூர் 90.2விரகனூர் 80.2 இடையபட்டி 72 கள்ளிக்குடி 68.4உசிலம்பட்டி 67சிட்டாம்பட்டி 52.4 ஆண்டிபட்டி, தாலுகா அலுவலகம் 52.4சோழவந்தான் 48மதுரை விமான நிலையம் 36 வாடிபட்டி 36ஈரோடு மாவட்டம்
மொடக்குறிச்சி 52 சென்னிமலை 26 கொடுமுடி 18 ஈரோடு 11 கரூர் மாவட்டம் மாயனூர் 72 கிருஷ்ணராயபுரம் 71 பஞ்சப்பட்டி 58கரூர் பரமத்தி 49.8 குளித்தலை 44.4 கரூர் 43 பாலவிடுதி 38மயிலம்பட்டி 29 அரவக்குறிச்சி 17 நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு 78 பரமத்தி வேலூர் 24 மோகனூர் 21நாமக்கல் 14 சேலம் மாவட்டம்
வீரகனூர் 38 சங்ககிரி 20 தலைவாசல் 19 கோவை மாவட்டம்
தொண்டாமுத்தூர் 60பில்லூர் அணை 21சின்கோனா 38 சின்னக்கல்லார் 57வால்பாறை தாலுகா அலுவலகம் 56 சோலையார் 42ஆழியார் 35 கோவை தெற்கு 20 வேளாண் பல்கலை 51.8திருப்பூர் மாவட்டம்உப்பார் அணை 25 திருப்பூர் தெற்கு 23 தாராபுரம் 15 மூலனூர் 11 நீலகிரி மாவட்டம்
குண்டா 37கெத்தை 46அரியலூர் மாவட்டம்
அரியலூர் 73.5 சுத்தமல்லி அணை 43 செந்துறை 35 திருமானூர் 25 சென்னை சென்னை கலெக்டர் அலுவலகம் 17.8 பெரம்பூர் மாநகராட்சி பூங்கா 12.3 தர்மபுரி மாவட்டம் அரூர் 76.2 கள்ளக்குறிச்சி மாவட்டம்
திருக்கோவிலூர் 60 மூங்கில் துறை பட்டு 54 பெரம்பலூர் மாவட்டம்
பாடாலூர் 72இறையூர் 68 செட்டிகுளம் 50 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் 120.8 ராமநாதபுரம் 57 திருவாடனை 44 ஆர்எஸ் மங்கலம் 44 கமுதி 15.8 சிவகங்கை மாவட்டம்
திருப்புவனம் 139 தேவகோட்டை 92 சிங்கம்புணரி 75.4 சிவகங்கை 55 திருப்பத்தூர் 48.4 காரைக்குடி 26மானாமதுரை 20தேனி மாவட்டம் சோத்துப்பாறை 38 பெரியகுளம் 37 வைகை அணை 22 ஆண்டிப்பட்டி 18 திருச்சி மாவட்டம்
பொன்னையாறு அணை 97.4 புள்ளம்பாடி 69.4 முசிறி 60 சமயபுரம் 54.4 வாத்தலை அணைக்கட்டு 45 தேவி மங்கலம் 44 திருவாரூர் மாவட்டம்மன்னார்குடி 67நீடாமங்கலம் 34.6நன்னிலம் 25 வலங்கைமான் 22 விருதுநகர் மாவட்டம்
சிவகாசி 122.3 திருச்சுழி 48 அருப்புக்கோட்டை 44 விருதுநகர் 39.8 காரியாபட்டி 36.2
தமிழக அரசே நீரை கடலுக்கு அனுப்பாமல் இருக்கும் கால்வாய்கள் , ஏரி , குளங்களை நிறைக்க வழி செய்யுங்கள் , விவசாயிகள் உங்களை போற்றுவார்கள்
மழை பெய்து நாடு செழிக்கட்டும்...