உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடையில் கொட்டி தீர்த்த கனமழை

கொடையில் கொட்டி தீர்த்த கனமழை

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இடைவிடாது பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று கொடைக்கானலில் காலை, 10:30 மணிக்கு துவங்கிய மழை, மாலை 4:00 மணி வரை இடைவிடாது பெய்தது. குறைவான அளவிலேயே வந்த சுற்றுலா பயணியரும் விடுதிகளில் முடங்கினர். நகரை பனிமூட்டம் சூழ்ந்ததால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை