உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 நாட்களுக்கு 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை அப்டேட்

2 நாட்களுக்கு 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் (ஏப்ரல் 03), நாளையும் (ஏப்ரல் 04) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை, விருதுநகர், குமரி, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், துாத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6qx7j3c4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 5ம் தேதி, கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பெரிய ராசு
ஏப் 03, 2025 22:31

தென்காசில மழையே இல்லே ஆனா தினமும் கனமழைனு போட்டு பீதில அழுத்துங்க ...


Ray
ஏப் 03, 2025 15:40

இது ஒன்னும் புது ரயில் இல்லே ரொம்ப காலமா ஓடிக் கொண்டிருக்கும் 6180 மதுரை திருப்பதி எக்ஸ்பிரஸ் ஹைதராபாத் வரை நீட்டிக்கப் படுகிறது அல்லது திருப்பதி ஹைதராபாத் இரண்டு ரயில்களை நிர்வாக வசதிக்காக இணைக்கிறார்கள்


Petchi Muthu
ஏப் 03, 2025 15:40

எங்க ஊரு நாளைக்கு கிணறு அங்க மழை பெய்யுது, ஆனால் வானிலை மைய லிஸ்டில் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை