உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 மாவட்டங்களில் நாளை கனமழை

7 மாவட்டங்களில் நாளை கனமழை

சென்னை: 'தமிழகத்தில், திண்டுக்கல், மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில், நாளை (நவ.26) இடி, மின்னலுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: மன்னார் வளைகுடா முதல், தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென் மேற்கு வங்கக்கடல் வரை, வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. தமிழகத்தில், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், நாமக்கல், கரூர், திருச்சி. பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை