வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விடுமுறைக்கு பிறகு மழை அளவு குறைந்தது
சென்னை: கனமழை காரணமாக ஊட்டி, கூடலூர், கோத்தகிரி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.,02) நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா விடுமுறை அறிவித்துள்ளார்.பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. சில இடங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று (டிச.,02) எங்கு எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2gx2oy5e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* கனமழை காரணமாக ஊட்டி, கூடலூர், கோத்தகிரி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.,02) நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா விடுமுறை அறிவித்துள்ளார். * நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.* செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு ஆகிய 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகள்
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு மட்டும்!
வேலூர், திருப்பத்தூர்,தருமபுரி,ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை பல்கலை தேர்வுகள் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
விடுமுறைக்கு பிறகு மழை அளவு குறைந்தது