உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் கனமழை 5 நாட்களுக்கு நீடிக்கும்

தமிழகத்தில் கனமழை 5 நாட்களுக்கு நீடிக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன் அறிக்கை:தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட் பகுதியில், 8 செ.மீ., மழை பெய்து உள்ளது. ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளத்தில், 6 செ.மீட்டர், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், 7 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.தற்போது, தென்மாநில பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், வரும் 14ம் தேதி வரை, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.நாளை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில், வரும் 12 முதல் 14 வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில், 12ம் தேதியும், ஈரோடு மாவட் டத்தில், 13ம் தேதியும் கனமழை பெய்யும்.சென்னையில், அடுத்த 24 மணி நேரத்தில், ஒருசில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி