சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (டிச.,02) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல், புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் இரவு 10:30 முதல் 11:30 மணிக்குள் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, மணிக்கு 70 முதல், 80 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 90 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசியது. புயல் கரையை கடந்த பிறகும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் (டிச.,02) கனமழை பெய்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=irmwbbmr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:* சென்னை,* திருவள்ளூர்,* காஞ்சிபுரம்,* செங்கல்பட்டு,* கிருஷ்ணகிரி,* நீலகிரி,* கோவை,* திருப்பூர்,* தேனி,* திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.