உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவன் தான்டா பெரிய வேலையா பாத்துட்டான்; புலி நகத்துடன் பேட்டி கொடுத்தவர் கைது

அவன் தான்டா பெரிய வேலையா பாத்துட்டான்; புலி நகத்துடன் பேட்டி கொடுத்தவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: புலி நகத்துடன் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவருக்கு பேட்டி கொடுத்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் என்பவர், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த செயின் குறித்து அந்த இன்ஸ்டா பிரபலம் கேள்வி எழுப்பினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=20dmwgrg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு, பதிலளித்த அவர், 'இதை வெளியில் சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். இது புலி நகம். ஆந்திராவில் விலை கொடுத்து வாங்கினேன். வேட்டைக்கு போக வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது', என்று வெகுளித்தனமாக பேசியுள்ளார். உடனே, அந்த இன்ஸ்டா பிரபலம், 'இனி நீங்க பேமஸ் ஆகப்போறீங்க' எனக் கூறினார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பாலகிருஷ்ணனின் வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஒரு புள்ளிமானின் கொம்பின் துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதன்பேரில், பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இது குறித்து வனத்துறையினர் முன்பு பாலகிருஷ்ணன் ஆஜரானார். அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த புலி நகம் போட்ட செயினை பறிமுதல் செய்த வனத்துறையினர், சோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Karthik
ஜன 20, 2025 19:02

தவளை ? தான் வாயாலதான் கெடுமாம். இந்த பப்ளிசிட்டி போதுமா அண்ணாச்சி..??


Bhaskaran
ஜன 20, 2025 09:27

அந்த காலத்தில் பல வீடுகளில் மருந்துக்காக மான் கொம்புநெஞ்சு வலிக்கான உரசிப் போடுவார்கள் யானைப் பல் பல் வலிக்கக சந்தணம் அரைக்கும் கல்லில் உரசி தாடையில்போடுவார்கள் ஆமை ஓட்டை கருக்கி தேனில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கடுமையான ஆஸ்த்மா குணமாகும் இது என் அனுபவத்தில் கண்ட உண்மைபூஜைக்காக சந்தணக்கட்டை போன்றவை இருக்கும் இது பல தலைமுறைகளாக பல நூற்றாண்டுகளாக இருக்கும் இதற்கு பில் ஏது .பல பிராமண மற்றும் சைவ பிள்ளை.முதலியார் செட்டியார் வீடுகளில் மான் தோலில் அமர்ந்து ஜெபங்கள் செய்வதை பார்த்திருக்கின்றேன் அதே போல் புலி பல் பதித்த சங்கிலி பல செல்வந்தர்கள் வீட்டில் இருக்கும் இதற்கெல்லாம் ரசீது ஆதாரம் ஏது .பரம்பரையாக வீட்டில் இருப்பதை பறிக்க வனத்துறைக்கு அதிகாரம் உண்டா நம் நாளிதழ் இதுபற்றி சட்ட ஆலோசகர் ஓய்வு பெற்ற விவரம் தெரிந்த வனத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து ஒரு கட்டுரை வெளியிட வேண்டும் இப்போதுள்ளவனத்துறை அதிகாரிகளுக்கு சட்டங்கள் சரியாக தெரியுமா .பரம்பரையாக பூஜை மற்றும் மருந்துக்காக பயன்படுத்தப்படும் இத்தகைய பொருட்களை பறிமுதல் செய்ய அதிகாரம் உண்டா.


நிக்கோல்தாம்சன்
ஜன 20, 2025 06:36

இப்படி சிக்கவெச்சுட்டியே பரட்டை


VENKATASUBRAMANIAN
ஜன 19, 2025 20:16

இதேபோல் மான் கறி சாப்பிட்டவரை கைது செய்யுமா.


Tetra
ஜன 19, 2025 17:58

மான் கறி சாப்டவனே வெளில வந்துட்டான். ஒரு நகத்துக்கும் துண்டு மான் கொம்புக்கும் கைதா?


Anantharaman Srinivasan
ஜன 19, 2025 19:48

மான்கறி சாப்பிட்டவன் ஜீரணம் பண்ணி தப்பிவிடுவான். புலி நகமும் மான் கொம்பும் என்றைக்கும் காட்டிக்கொடுக்கும்.


Tetra
ஜன 19, 2025 17:58

மான் கறி சாப்டவனே வெளில வந்துட்டான். ஒரு நகத்துக்கும் துண்டு மான் கொம்புக்கும் கைதா?


தியாகு
ஜன 19, 2025 17:46

ஆளோட சிரிப்பை பார்த்தால் கட்டுமர திருட்டு திமுகவின் உறுப்பினராக இருக்க வாய்ப்புகள் அதிகம்னு தோணுது,.


Venkatesan Ramasamay
ஜன 19, 2025 17:28

ஊரத் தெரிஞ்சிகிட்டேன், உலகம் புரிஞ்சிகிட்டேன்,கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு, நாளும் புரிஞ்சிடுச்சு,கண்மணி என் கண்மணி பச்சக் குழந்தையின்னு, பாலூட்டி வளர்த்தேன், பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி.....ஐயோ பாவம் விதி யாரைத்தான் விட்டு வைக்குது..


pv, முத்தூர்
ஜன 19, 2025 17:22

மானை வேட்டையாடியவனை விட்டுவிடுங்கள், பேட்டி கொடுத்தவனை கைதுசெய்யுங்கள்.


Sampath Kumar
ஜன 19, 2025 16:47

நுணலும் தன வாயால் கேடும் என்பது இது தான் போல


புதிய வீடியோ