உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒழியாது ஒளிந்திருக்கும் லஞ்சம் எனும் பெருச்சாளி!

ஒழியாது ஒளிந்திருக்கும் லஞ்சம் எனும் பெருச்சாளி!

நமது சிறப்பு நிருபர்'இடைநில்லா பேருந்து' எனும் அறிவிப்பு பலகையிலும், 'வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது' எனும் செய்தியிலும் திருப்தியுறும் நாங்கள் தமிழர்கள்; 'தீப ஒளி'யாய் வரும் தீபாவளியே... பதில் சொல்... எங்களின் எந்த இருள் அகற்ற நீ வருகிறாய்?ஏழரை கேள்விகள்!1. முதிய நடிகரது உடல் அசையா உதட்டசைவை, 'சிறந்த நடிப்பு' என்று கொண்டாடும் மனங்களிடம், 'தள்ளாத வயதிலும் உடல் வருத்தி உழைத்து உண்ணும் உன் வீட்டு முதியோரை கொண்டாடு' என அறிவூட்ட வருகிறாயா?2. 'குற்றவாளிகள் தப்பினர்' - அய்யோ; 'தப்பியவர்கள் சிக்கினர்' - அருமை; இந்த 'அய்யோ... அருமைக்கு இடையில், தப்பிச் சென்றவர்கள் நிறைவேற்றிய பணிகள் என்ன' எனும் கேள்விக்கு விடை தரும் திரி கொளுத்த வருகிறாயா?3. 'விடாமுயற்சியுடன் பொறியியல் படித்து முடித்தேன்' என்ற நம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரது பேச்சில், 'படிப்பிற்கும், பார்க்கும் பணிக்கும் சம்பந்தம் இருக்காது' எனும் உண்மை ஒளிந்திருப்பதை 'விசில்' அடிக்கும் இளைஞர்களுக்கு புரிய வைக்க வருகிறாயா?4. 'முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது நடவடிக்கை, திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த த.வெ.க., செய்யும் சதி வேலை' எனும் செய்தி, 'அனுதாபம் உண்டாக்கும் சூழ்ச்சி' என்றுணர்ந்த மனங்களில், நீ இரண்டாவது விளக்கு ஏற்ற வருகிறாயா?5. ' ஜெயிலர் 2 வசூல், நஸ் ரியாவின் உடை, அனிருத் திருமணம் பற்றி விரல்நுனியில் தகவல் வைத்திருக்கும் இளைஞனே... நம் பெருமைக்குரிய விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை எப்படி இருக்கிறது' எனும் கேள்வி எழுப்ப வருகிறா யா?6. 'பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கை என பல கோடி ரூபாய் கரைத்த பிறகும், 'எனது துறை சார்ந்த பிழையால் மக்களுக்கு பாதிப்பெனில் நானே பொறுப்பு' என எந்த அமைச்சரும் சொல்லாதது ஏன்' எனக் கேட்டு சிந்திக்க வைக்க வருகிறாயா?7. 'தமிழகத்தில் லஞ்சம் ஒழிந்துவிட்டது' என ஆட்சியாளர்கள் பேசும் பெருமை; 'தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைகளில் சிக்கும் பணம்' என சில ஊடகங்கள் சொல்லும் உண்மை; 'எதை நாங்கள் நம்புகிறோம்' என அறிந்து கொள்ள வருகிறாயா?7 ½ ' கரப்பான் பூச்சிகள் ஜாக்கிரதை' என வெளிச்சம் தர வருகிறாயா?உங்களது கருத்துக்களை கமென்டில் பதிவிடுங்கள் வாசர்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

SULLAN
நவ 03, 2026 12:13

கரப்பான்களை கண்டு பயப்படும் நீங்கள் சிஸ்டத்தை அல்லவா?? சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். சிஸ்டம் லஞ்சம் ஊழலால் நாறிக்கிடந்தால் கரப்பான்கள் இருக்கத்தான் செய்யும்.


கடல் நண்டு
நவ 01, 2026 19:11

அருமையான பதிவு .. உண்மையில் தமிழனுக்கு புத்தி வராது என்ற நிலையில் , அஞ்சலி.செலுத்தும் விளக்காக தான் தீபஒளி திகழும் ..


kalyanasundaram
நவ 01, 2026 16:38

NOT EVEN A SINGLE PAPER WILL MOVE IN GOVT. OFFICES WITHOUT CASH ATTACHED TO PAPERS/BROKERS. IT IS A PROVEN FACT AND UNDENIABLE TRUTH. HENCE WHY ALL THESE PROMISES/LIPTALKS. UNLESS THE DEATH PENALTY IS LEGALIZED, CORRUPTION WILL EXIST


Anantharaman Srinivasan
நவ 01, 2026 12:59

எல்லா அலுவலகங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். லஞ்சம் கேட்டால் அதுபற்றிய விவரங்களை பாதிக்க ட்டவர்கள் தயங்காமல் எழுதிப்போடவேண்டும். வாரம் ஒருமுறை லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது முதலமைச்சரின் தனிபிரிவு அப்புகார்களை எடுத்துச்சென்று தக்க நடவடிக்கை எடுத்தால் லஞ்சத்தை ஒரளவு குறைக்க முடியும்.


கணேசன் எஸ்
நவ 01, 2026 16:23

லஞ்சம் தூணிலும் இருக்கிறது துரும்பிலும் இருக்கிறது.


Ram
நவ 01, 2026 12:58

பழைய வீட்டை வாங்கியபிறகு பெயர்மாற்றத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தாள் பலமாதங்கள் ஆனாலும் அப்ரூவல் ஆகுவது இல்லை . புரோக்கர் மூல்யமாக. வந்து சில ஆயிரங்களை கொடுத்தால்தான் நடக்கின்றது . ஏன் பத்திர பதிவு நடக்கும்போதே பெயர்மாற்றம் நடக்கக்கூடாது


Anantharaman Srinivasan
நவ 01, 2026 12:48

இந்தகாலத்தில் மக்களுக்கு பாதிப்பெனில் நானே பொறுப்பு என எந்த அமைச்சரும் பதவி விலகமாட்டார். அதிகாரிகளை பலிகடா ஆக்கிவிட்டு தப்பிக்கத்தான் முயல்வர்.


Raja k
நவ 01, 2026 12:03

தீப ஒளி ஏற்ற வருவாயா?


Varadarajan Nagarajan
நவ 01, 2026 11:09

இன்றுவரை சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக பல்லாயிரம் கோடிகள் செலவிட்டும் எதிர்வரும் பருவமழைக்கு முன்பாக பல நீரிறைப்பு பம்புகளை வாடைக்கு எடுத்து தயார் நிலையில் அரசு வைப்பதை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என நாம் கூறுகின்றது. அப்படியென்றால் இதுவரை மக்கள் வரிப்பணத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் என்னவாயிற்று? ஒவ்வொரு அரசு பணிஇடங்களுக்கும், இடமாறுதலுக்கும் ரேட் நிர்ணயம் செய்து ஆட்சியாளர்கள் வசூலித்துவிட்டு பிறகு வேலையில் சேர்ந்தபிறகு லஞ்சம் வாங்குவதாக மக்கள் புலம்புவதையும்? லஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் எந்த வேலையும் நடக்காது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு மக்கள் தாமாக முன்வந்து கொடுப்பதுபோல பேட்டியளிப்பதும், ஏமாற்று மற்றும் லஞ்ச நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்டால் சிறிதுகூட வெட்கப்படாமல் பேட்டிகொடுப்பதையும் மக்களும் இளைங்கர்களும் வாழ்க்கையின் நடைமுறையாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்திற்கு வந்தபிறகு இளைங்கர்கள் வீதிக்குவந்து போராடுவது விந்தையாக உள்ளது.


Ram pollachi
நவ 01, 2026 09:28

லஞ்சம் லஞ்சம் ஊர் எல்லாம் லஞ்சம் டன்டனக்கா ! மர்பீஸ் புளூ பிராந்தி குவாட்டர் விலை ரூ380/- ஒரு புல் பாட்டில் விலை ரூ.1,550/- ஸ்டாக் குறைவாக உள்ளது.... பொள்ளாச்சி, கோவை மனமகிழ் மன்றங்களில் கிடைக்கிறது..... விலை அதிகமாக சொல்கிறார்கள் என பல இடங்களில் தேடி கடைசியாக கோவையில் உள்ள எலைட் ஒயின் கடையில் ஒரு புல் பாட்டில் விலை ரூ.1,350/- ... இப்படி கண்டபடி விலையை சொல்லி தரம் கெட்ட குடிகாரர்களை ஏமாற்றி வீட்டில் தீப ஒளி ஏற்ற வேண்டுமா?


SULLAN
நவ 03, 2026 12:17

அவன் இன்னும் திருந்தல மாமா?? ஊர் ஊரா யாவாரம் பார்த்தவன பார்த்திருக்கேன் ஊர் ஊரா குவாட்டர் ,புல் விலை கேட்டவன இப்பத்தான் பார்க்குறேன்??


ம பு மன்னார்சாமி
நவ 01, 2026 09:10

எனக்கு இப்போதும் அரசு அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால்தான் என் வேலை நடக்கும் என்று சென்னை கிண்டியில் பணி செய்யும் உதவி தாசில்தார் அடம் பிடிக்கிறார்.


Anantharaman Srinivasan
நவ 01, 2026 12:44

லஞ்ச ஒழிப்புத்துறையில் தைரியமாக புகார் கொடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை