உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு தலைமை செயலர்கள் மீதான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

அரசு தலைமை செயலர்கள் மீதான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

சென்னை : 'தலைமை செயலர்களுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்ததில், மகிழ்ச்சி கொள்ளவில்லை' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள், இந் நாள் தலைமை செயலர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. ' அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை வேலை வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து, ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்; கருணை அடிப்படையில், வேலை கோருவோர் பட்டி யல் தயாரிக்க சாத்தியக்கூறு உள்ளதா என, மூன்று மாதங்களில் அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம், 2023, செப்டம்பரில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக, முன்னாள் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, தற்போதைய தலைமை செயலர் முருகானந்தம் ஆகி யோருக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முன்னாள் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, தற்போதைய தலைமை செயலர் முருகானந்தம் ஆகி யோர் நேரில் ஆஜராகினர். அதைத்தொடர்ந்து, தற்போதைய தலைமை செயலர் முருகானந்தம் தரப்பில், 'கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க கால நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 'கடந்த ஜூன் 16ம் தேதி, இந்த குழு கூடி, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கோருவோரின் பட்டியலை மாநில அளவில் பராமரிப்பது என முடிவு செய்துள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. முன்னாள் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தரப்பில், இது சம்பந்தமாக, அரசு பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி, மனுக்கள் தாக்கல் செய்தனர். இதை ஏற்ற நீதிபதி, இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். பின், நீதிபதி கூறியதாவது: தலைமை செயலர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டதில், இந்த நீதிமன்றம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. மாறாக, தர்மசங்கடமான நிலையிலேயே உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை பிறப்பித்த முன்னாள் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, அதை மீறி இருப்பது துரதிஷ்டவசமானது. நீதிமன்ற உத்தரவை தலைமை செயலரே பின்பற்றாவிட்டால், வேறு யார் பின்பற்றுவார்? கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக, அரசு பணியாளர் விதிகளில் இரண்டு வாரங்களில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ