உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு கூடாது: தமிழக போலீசுக்கு ஐகோர்ட் அறிவுரை

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு கூடாது: தமிழக போலீசுக்கு ஐகோர்ட் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும்,'' என தமிழக போலீசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.அண்ணா பல்கலை விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை எனக்கூறி பா.ம.க. தாக்கல் செய்த மனு இன்று (ஜன.,10) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7eyr90xw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, தமிழக போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '' தடையை மீறி போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்,''ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு கட்டாமல் அனைத்து தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ஒரு தரப்புக்கு ஒரே நாளில் அனுமதி, மற்றவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யாமல் இருக்க்கூடாது. போராட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் போலீசாரை தான் குறை சொல்வார்கள் '' எனக்கூறிய நீதிமன்றம் பா.ம.க., மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.,23க்கு தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

அப்பாவி
ஜன 11, 2025 07:04

ஓகே சார். எதிர்க்கட்சி ஆளுங்களையும் கண்டுக்காம விட்டுடறோம்.


Mani . V
ஜன 11, 2025 05:52

அப்புடியா? ஆனா, இது புதுசா இருக்கு சார்.


தாமரை மலர்கிறது
ஜன 10, 2025 21:14

கோர்ட்டின் அறிவுரை கடாசப்படும். அதனால் டெல்லியை போன்று தமிழக போலீசை கவர்னரின் கீழ் கொண்டுவருவது தான் சரியாக இருக்கும். இதற்கான ஒரு பில்லை மத்தியஅரசு கொண்டுவர வேண்டும்.


Ramesh Sargam
ஜன 10, 2025 20:58

என்னதான் அறிவுரை ஐகோர்ட் தமிழக அரசுக்கு, குறிப்பாக தமிழக போலீசுக்கு கூறினாலும், அவர்கள் கேட்கமாட்டார்கள்.


Ramki
ஜன 12, 2025 19:53

நீதிமன்றங்கள் அறிவுரைகள் மட்டுமே கூறுகின்றன எந்த விதத்திலும் நீதிமன்றங்களின் அறிவுரைகள் யாருக்கும் நடைமுறையில் வருவதில்லை நீதிமன்றங்கள் நீதி முறையில் தண்டனை தரும் இடங்களாக இல்லாதிருப்பது வருத்தமாக உள்ளது


Karthik
ஜன 10, 2025 19:14

ரொம்ப நல்லா ஓடுது நீதித்துறை பொழப்பு. சாமானிய மக்களுக்குத்தான் இழப்பு


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜன 10, 2025 19:12

இதுதாங்க திராவிட மாடல்.


Nandakumar Naidu.
ஜன 10, 2025 18:42

திரு. ஹைகோர்ட் அவர்களே, நீங்கள் எந்த மாநிலத்தில் உள்ளீர்கள்? இது திமுக ஆட்சி. அவர்களுக்கு அறிவுரை என்றால் எவ்வளவு கிலோ என்று கேட்பார்கள். ஆர்டர் கொடுக்கவேண்டும். சவுக்கால் அடித்தால் தான் அவர்களுக்கு உரைக்கும். அறிவுரையாம்,அறிவுரை.


Ramki
ஜன 12, 2025 19:56

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த நீதிமன்றமும் ஆட்சியாளர்களை நேர்வழிப்படுத்த இயலாத நிலை.இவர்களின் அறிவுரைகள் மட்டுமே ஊடகங்களில் வெளிவரும் இந்த நீதிமன்றங்கள் நீதியின் அடிப்படையில் ஆமா ஆகவே முன்வந்து விசாரணை செய்து உடனுக்குடன் தண்டனையும் கொடுக்கும் துணிவு இல்லாத ஒரு மன்றம் சாதாரண மக்களை நீதிமன்ற அவமதிப்பு என்ற கட்டுக்குள் வைத்து விசாரிக்கும் நிலையில், ஆனாலும் ஆட்சியாளர்களையோ அல்லது கட்சியாளர்களையோ அல்லது அரசு ஊழியர்களையோ எந்த ஒரு முறையிலும் தண்டனையிலிருந்து வெளியே வைத்து தான் விசாரணை செய்யும்.தண்டனையே கிடையாது அப்பொழுதும் அறிவுரையோடு சரி .ஏதோ நீதிமன்றங்கள் உள்ளன யாருக்காக உள்ளன என்று ஆண்டவனுக்கு தான் தெரியும்


Anantharaman Srinivasan
ஜன 10, 2025 18:15

தமிழக போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தடையை மீறி போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, என்றார். ஆனால் சட்டசபையில் முதல்வர் திமுக அனுமதித்துள்ள இடத்தில் தான் போராட்டடம் நடத்தியது என்று கூறியுள்ளார். இரண்டு செய்திகளும் முன்னுக்கு பின் முரணாகயுள்ளதே. ? எது உண்மை..?


Nandakumar Naidu.
ஜன 10, 2025 18:42

இவர்கள் என்றைக்கு உண்மையை பேசி உள்ளார்கள்?


Radha Krishnan
ஜன 10, 2025 18:14

So far to the best of my knowledge courts have acted fast only in karunanidhi samaadhi case without any vaidha. Rest in all places only vaidha, vaidha, vaidha.


Dharmavaan
ஜன 10, 2025 18:10

ஆணை இட வேண்டிய நீதி அறிவுரை சொல்கிறது.அதை செய்யாவிட்டால் என்ன தண்டனை என்று கூட சொல்லவில்லை.யார் இப்படி நடக்க அழுத்தம் கொடுக்கிறார்கல் என்றும் கேட்கவில்லை.வழவழ நீதி


புதிய வீடியோ