உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலை கோவிலில் கட்டுமானங்களுக்கு ஐகோர்ட் தடை

திருவண்ணாமலை கோவிலில் கட்டுமானங்களுக்கு ஐகோர்ட் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் உள்ளே, வெளியே, எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரே, 6.40 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந் தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ''கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது என, இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், புராதன கோவிலின் உள்ளே கட்டுமான பணி நடக்கிறது,'' எனக் கூறி, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். இதை பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, இந்த நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வராமல், அறநிலைய துறை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் செயல் கண்டனத்திற்குரியது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலின் நான்காவது பிரகாரத்தில், சுற்றுச்சுவருக்கு மிக அருகில், க்யூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் காத்திருப்பு கூடம் கட்டப்படுகிறது. இது, அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கட்டுமானங்கள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்கும் வகையில், ஆவண, ஆதாரங்களுடன், அறநிலைய துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்., 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை, நான்காம் பிரகாரத்தில், க்யூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் காத்திருப்பு கூடம் மட்டுமின்றி, கோவிலின் உள்ளே மற்றும் வெளியே, எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள அறநிலைய துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அக்., 5ம் தேதி கோவிலில் ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rangarajan Cv
செப் 26, 2025 12:37

Problem is if court directives are not observed by the govt, what next? Will court take action or will keep on issuing warnings?


G Mahalingam
செப் 26, 2025 08:54

திமுகவுக்கு கடவுள் இல்லை. ஆனால். டெண்டர் விடப்பட்டு அதன் மூலம் கோவில் பணத்தை கொள்ளை அடிக்க முடியும். கடவுள் இவர்களை எப்போது தண்டிப்பார்.


பிரேம்ஜி
செப் 26, 2025 06:48

கோவிலையே இடித்து ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விடக் கூடியவர்கள் ஆட்சி நடக்கிறது. ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது! சர்ச், மசூதிகள் மட்டுமே தப்பிக்கும்!


Kasimani Baskaran
செப் 26, 2025 03:48

இடைக்கால தடை மட்டுமே என்றால் கோர்ட் கூட இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் புரிந்துகொள்ள முடியும்.


ManiK
செப் 26, 2025 02:07

அராஜக துறையை நடத்துகிறார் சோக்கர்பாபு. கோவில்களில் தேவையற்ற வேலைய மட்டுமே செய்து ஆனால், திருப்பணி செய்வதுபோல் காட்டி விளம்பரம் செய்து திமுக ஜால்ரா மீடியா வழியாக பிம்பம் ஏற்படுத்தி அடிக்கும் கொள்ளைக்கு முழுதாக தடை வேண்டும்.


Ramesh Sargam
செப் 26, 2025 01:43

கோவில்களின் உள்ளே உண்மையான பக்தர்களைத்தவிர அரசியல்வாதிகள் யாரும் வரக்கூடாது என்று ஒரு பொதுவான தடையை நீதிமன்றம் அறிவிக்கவேண்டும். அப்படி அரசியல்வாதிகள் சாமி கும்பிட விருப்பம் தெரிவித்தால், அவர்கள் மற்ற பொது பக்தர்களோடு பக்தர்களாக வர உத்தரவிடவேண்டும். Absolutely NO VIP, VVIP darshan for anyone.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை