உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதியோரை குறிவைத்து கொலை கொள்ளை நடப்பது அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் கவலை

முதியோரை குறிவைத்து கொலை கொள்ளை நடப்பது அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : 'முதியோர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்களை சிலர் குறிவைத்து இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். இதனால் கொலை, கொள்ளை நடப்பது அதிகரிக்கிறது,' என தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையம் அமைக்க தாக்கலான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு கவலை தெரிவித்தது.

மதுரையை சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

முதியோர் நலனிற்காக 2007 ல் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டப்பூர்வ வாரிசுகள் பெற்றோரை பராமரிக்கவில்லையெனில் போலீசில் புகார் அளிக்கலாம். இது குறித்து 70 சதவீத முதியோர்களுக்கு விழிப்புணர்வு இல்லை.தற்போது கணவன், மனைவி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் பெற்றோரை பராமரிக்க நேரமில்லை. வசதிகள் இருந்தபோதிலும், சில முதியவர்கள் தனிமையில் தவிக்கின்றனர். பேசுவதற்கு வீட்டில் யாரும் இல்லாததால், முதியவர்கள் தாமாக முன்வந்து முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைகிறார்கள். சில குடும்பங்களில் மாமியார் மற்றும் மருமகளுடன் ஏற்படும் பிரச்னை, சொத்து பிரச்னையால் முதியோர் இல்லங்களைத் தேடி பெற்றோர் செல்ல வழிவகுக்கிறது. இதுபோன்ற சூழலால் முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன.சில முதியோர் இல்லங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. முதியோர்களை சரியாக பராமரிப்பதில்லை. சில முதியோர் இல்லங்களில் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக வழங்குவதில்லை.மத்திய சுகாதாரத்துறையின் தேசிய முதியோர் சுகாதார பராமரிப்புத் திட்டம் முதியோருக்கு மருத்துவ உதவி, மறுவாழ்வு அளிக்க வழிவகுக்கிறது. இத்திட்டம் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம், ஆயுஷ், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையத்தை (என்.சி.ஏ.,) நிறுவ மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு அளித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: முதியோர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்களை சிலர் குறிவைத்து இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். இதனால் கொலை, கொள்ளை நடப்பது அதிகரிக்கிறது. முதியோர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலர், தேசிய முதியோர் மைய இயக்குனர் ஜெனரல், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அவர்கள் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ram pollachi
ஜூன் 11, 2025 11:17

ஆண்களிடம் நிலமும், பெண்களிடம் தங்க நகைகள் உள்ளது... கூட்டி கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 11, 2025 10:37

எல்லா திமுக அரசு வழக்குகளிலும் உண்மை தேவை மற்றும் சமூக தேவை தற்போதைய சூழ்நிலை சமூகத்திற்கு எது நல்லது என்று ஆராய்ந்து பார்க்காமல் திமுக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் என்ன நடக்கும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை கனிம வள கொள்ளை மது கள்ளச்சாராயம் போதை சாலையில் அடாவடித்தனம் இவைகள் தான் நடக்கும். தமிழக அரசின் மீது தானாக முன்வந்து வழக்கு தொடுக்கலாமே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து. கவர்னருக்கு கால நிர்ணயம் செய்து கவர்னர் விவி கிரி போல் இரப்பர் ஸ்டாம்ப் பாக வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட தெரிந்த நீதி மன்றம் முதலமைச்சர் கண்டித்து உத்தரவிட தயங்குவது ஏன். ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பா.


raja
ஜூன் 11, 2025 08:57

உங்களால கவலைதான் போடமுடியும் மிஞ்சி போனால் கண்ணீர் விட்டு கதறி அழுவீங்க...சட்டம் ஒழுங்கு கேடு கேட்ட நிலைக்கு கொண்டு போன இந்த கேவல திருட்டு மாடல் ஆட்சியை கலைக்க முடியுமா....


konanki
ஜூன் 11, 2025 08:50

கவலை பட்டு என்ன பயன்?


Padmasridharan
ஜூன் 11, 2025 08:27

"பெற்றோரை பராமரிக்கவில்லையெனில் போலீசில் புகார் அளிக்கலாம்" இதைப்பற்றி காவலர்கள் சரியான விழிப்புணர்வு மக்களிடையே நடத்தி உள்ளனரா? அவர்கள் இலஞ்சப் பணத்தை எப்படி மக்களை அதட்டி, மிரட்டியடித்து வாங்கவேண்டுமென்றுதானே யோசித்து ரோந்து வந்துகொண்டிருக்கின்றனர். யார் குடிக்கராங்க பணத்தை புடுங்கு, யார் பொண்ணோட உட்கார்ந்து இருக்காங்க பொருளைப் புடுங்கி, பணத்தை வாங்கு..லஞ்சம் வாங்குவது குற்றம் என்ற சட்டத்தை மொதல்ல மாற்றி அமைக்கறதே கறைபடிந்த காவலர்கள்தான். இதனால் புது குற்றங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர். அவசர எண் 100 என்பதை தற்பொழுது ஆட்டோக்களின் பின்னால் 103 என்று இருக்கிறது. இதுவே நிறைய பேருக்கு சென்றடையவில்லை. இந்திய பொருளாதாரத்தை வளர்க்கச் செய்யும் மக்களுக்கு குடும்பத்தில் அமைதியான அன்பை வளர்க்க தெரியவில்லை. சமூகத்த நல்வழிப்படுத்ததான் காவல்நிலையங்களே தவிர பணம்/பொருள் புடுங்கி புது குற்றவாளிகளை உருவாக்குவதல்ல. . கல்விக்கூடங்களுக்கு அடுத்து காவல்நிலையங்கள் செய்யக்கூடிய நிறைய நல்ல காரியங்கள் இருக்கின்றது. ஆனால் அவர்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியும் இவையெல்லாம் அவர்கள் குடும்ப வம்சத்திற்கு பாவ மூட்டைகளாகத்தான் மாறும் சாமி.


Mani . V
ஜூன் 11, 2025 04:51

"அப்பா" ஆட்சியில் எங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. யார் செத்தால் எங்களுக்கென்ன? தினமும் சூட்டிங், ரோடு ஷோ நடத்தி மக்களின் வரிப்பணத்தை காலி செய்யணும். கோபாலபுரம் குடும்பம் மட்டும் வாழணும். தேர்தல் நேரத்தில் மட்டும் எங்களுக்கு உங்கள் நினைப்பு வரும். அப்பொழுது நாங்கள் போடும் பிச்சையை ஸாரி வழங்கும் அன்பளிப்பை வாங்கிக் கொண்டு எங்களுக்கே ஓட்டுப் போடணும்.


Kasimani Baskaran
ஜூன் 11, 2025 03:43

திராவிடம் உருவாக்கி வைத்து இருக்கும் ஞானசேகரன் போன்றோர் மிகப்பெரிய குற்றம் செய்தால் மட்டுமே மாட்டவேண்டியிருக்கும் [அப்படியே மாட்டினால் கூட ப்பிலைட் மோடு வித்தை மூலம் வெளியே வந்துவிடுவார்கள்]. இல்லை என்றால் 15 வழக்குகள் இருந்தாலும் வட்டம், மாவட்டம் மூலம் வெளியே வந்து உலக உத்தமர்கள் போல உலா வருவார்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை