உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்; தடை கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்; தடை கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் (பிப்ரவரியில்) தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி (பிப்.25ல்) மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம், சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என ஏற்கனவே உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளன. அதை மீறுவது சட்டவிரோதம். வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.பிப்.24ல் விசாரணையின்போது இரு நீதிபதிகள் அமர்வு, 'ஜாக்டோ-ஜியோ சார்பில் எவ்வித வேலை நிறுத்தத்திலும் ஈடுபடக்கூடாது,' என இடைக்கால தடை விதித்தது.நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: சட்டப்படி உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று போராட்டம் நடத்தலாம். ஏதாவது சட்டவிரோத செயல்கள், அசம்பாவிதம் நடந்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். மக்களின் அடிப்படை உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ragupathy
ஜூன் 04, 2025 17:03

ஜாக்டோஜியோவைத் தடை செய்தால் அரசு ஊழியர்கள் அடங்குவார்கள்...


தமிழன்
ஜூன் 04, 2025 14:32

கடந்த முறை திமுக அரசமைய எடப்பாடிக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய ஜாக்டோ அமைப்பிற்கு ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பழைய ஓய்வூதிய திட்டம் என்று வாக்குறுதி கொடுத்தான் ஒருவன் அவன் இப்பொழுது எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 04, 2025 09:00

பிப்.24 விசாரணையின்போது இரு நீதிபதிகள் அமர்வு, ஜாக்டோ-ஜியோ சார்பில் எவ்வித வேலை நிறுத்தத்திலும் ஈடுபடக்கூடாது, என இடைக்கால தடை விதித்தது. அந்த ரெண்டு நீதியரசர்களும் கழக நீதி அணியை சார்ந்தவர்களோ ?


நரேந்திர பாரதி
ஜூன் 04, 2025 08:25

தேர்தலுக்கு தேர்தல் இவனுங்களுக்கு வேற வேலையில்லை...எல்லாம் தண்ட சம்பளம்...ஸ்கூல்ல ஒரு பயலும் வேலை பாக்குறது இல்ல...எல்லாம் சைடு பிசினஸ் எப்படியோ அடுத்த வருஷம் தமிழக மக்களின் விடியலுக்கு உதவுனா நல்லது...இல்ல பழைய குருடி கதவை திறடி கதையா பாப்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை