உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூல் லிப் போதைபொருளை கட்டுப்படுத்த வழிகாட்டும் உயர் நீதிமன்றம்

கூல் லிப் போதைபொருளை கட்டுப்படுத்த வழிகாட்டும் உயர் நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'கூல்லிப்' உள்ளிட்ட புகையிலை பொருட்கள் புதிய வடிவில் வெளிவருகின்றன. அவை குழந்தைகளை கவர்கின்றன. மோசமான நிலைமை கருதி, உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.தென்காசி மாவட்டம், காளத்திமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜா. தடை செய்யப்பட்ட 'கூல்லிப்' புகையிலை போதைப்பொருளை பெங்களூருவிலிருந்து கடத்தி வந்ததாக கடையம் போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான ஆனஸ்ட் ராஜா ஜாமின் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் அல்லது குழந்தைகளுக்கு விற்க முயன்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். அது ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தால், சம்பந்தப்பட்ட பணியாளர், நிறுவன இயக்குனர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்.சட்டப்பூர்வ எச்சரிக்கை படம், வாசகம் தயாரிப்பின் மீது இடம்பெறவில்லை எனில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை பொருட்கள் இல்லாத கல்வி நிறுவனங்களாக மாற்ற வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும். புகையிலை அல்லது நிகோடின் கறைகளை கண்டறிய அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் குறைந்தபட்சம், 2 முறை பல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.முடிந்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகளுக்கு புகையிலை விழிப்புணர்வு மையம் நிறுவ வேண்டும். போதைக்கு அடிமையான குழந்தைகளுக்கு ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர், தன்னார்வலர் கொண்ட கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும். குழந்தைகளின் மன உறுதியை பாதிக்காத வகையில், அவர்களின் பைகளை கவனமாக பரிசோதிக்கும் வகையில் சுற்றறிக்கையை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்யலாம். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது. அதை நிறைவேற்ற மாநில அரசுகள் கடமைப்பட்டுள்ளன. புகையிலை பொருட்கள் புதிய வடிவில் தயாரித்து வெளிவருகின்றன. அவை குழந்தைகளை கவர்கின்றன. மோசமான நிலைமையை கருத்தில் கொண்டு, உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
அக் 31, 2024 09:32

டாஸ்மாக்கை அரசே நடத்தி குடிகாரர்களை தீவிரமாக உருவாக்குவதில் எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவுக்கு எங்கும் முனைப்பாக நடந்தது கிடையாது.


வைகுண்டேஸ்வரன்
அக் 31, 2024 10:04

இந்திய மாநிலங்களிலேயே, மிகவும் அதிகமா மதுவிற்பனை உத்திரபிரதேசத்தில் தான். இதில் தமிழ் நாடு 11 ஆவது இடத்துல தான் இருக்கு. குஜராத் தில் கூட மது விற்பனை தமிழ் நாட்டை விட அதிகம்.


raja
அக் 31, 2024 13:50

ஆக கொத்தடிமைக்கு தமிழன் குடிகாரன் ஆவது பெரிய விசயம் இல்லை அவனை விட உபி காரன் முன்னாடி இருக்கான் அதுதான் சந்தோசம்... என்ன ஒரு திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற குள்ளநரித்தனம் தமிழன் மீது


Kasimani Baskaran
அக் 31, 2024 16:43

உபி மக்கள் தொகை தமிழகத்தை விட மூன்று மடங்கு. எந்த மாநிலத்தில் மாநில அரசு சாராயக்கடையை நிர்வகிக்கிறது?


narayanansagmailcom
அக் 31, 2024 08:28

கல்வியில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழ் நாட்டை இன்று குடி மற்றும் போதை மருந்து நிறைந்த மாநிலமாக மாற்றிய பெருமை நம் திமுக திராவிடமாடல் அரசுக்கு உண்டு


raja
அக் 31, 2024 06:45

திருட்டுடா... திராவிடம் டா... மாடல்டா போதை டா... நம்பர் ஒன்னு டா... காறி துப்புடா...


Mani . V
அக் 31, 2024 05:27

ஒருவேளை ரேஷன் மூலமாக அளவாக கொடுப்பார்களோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை