உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பதி போல தமிழக கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம் வசதி; அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

திருப்பதி போல தமிழக கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம் வசதி; அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழக கோவில்களின் நிலத்தை மீட்க, கோவில் சொத்துக்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகள், அறிவு ஜீவிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கோவில் நில வாடகை, குத்தகை, மக்கள் செலுத்தும் பூஜை கட்டணத்தை ஆன்லைனில் வசூலிக்க வேண்டும். கோவில் நிலம் மற்றும் சொத்துக்களை தனி நபர்களின் பெயருக்கு சாதகமாக மாற்றக்கூடாது. கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நெரிசல் ஏற்படுகிறது. சபரிமலை, திருப்பதி கோவில்களில் உள்ள தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முறை மூலம் எவ்வித தொந்தரவும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யலாம். ஊழியர்கள் பணம் வசூலித்து தரிசனம் செய்ய அனுமதிக்கும் முறைகேடுகளை தவிர்க்கலாம். தமிழகத்தின் முக்கிய கோவில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதிகள் தமிழக அறநிலையத்துறை செயலர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நவ., 12க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Balakumar V
அக் 11, 2025 14:50

திருச்செந்தூர் பழனி ஸ்ரீரங்கம் ஆலயங்களில் கட்டாய ஆன்லைன் தரிசன முறை வேண்டும்.


Rengaraj
அக் 11, 2025 13:58

முக்கிய விசேஷ தினங்களில் அர்ச்சனை, மாலை சாற்றுதல் , வேட்டி புடவை சாற்றுதல் எல்லாம் உற்சவருக்கே , மூலவரை தரிசனம் செய்ய மட்டும் அனுமதி


Barakat Ali
அக் 11, 2025 09:40

ஆன்லைனில் முன்பதிவு செஞ்சா எனது அரசு முறைகேட்டில் ஈடுபடமுடியாதே ......


தமிழ்வேள்
அக் 11, 2025 08:58

முன்பதிவு மட்டுமே தரிசன வழி என்பது தவறு.. நிறைய பக்தர்கள் நினைத்தவுடன் கிளம்பி தோன்றிய கோவில்களில் தரிசனம் செய்யும் பழக்கம் உடையவர்கள்..


G Mahalingam
அக் 11, 2025 13:42

தினம் 30000 பேர் வரும் கோவிலுக்கு மட்டும்.


KRISHNAN R
அக் 11, 2025 08:30

திருப்தியில்.. உள்ள ஏற்பாடு.. ம்..... வசூல் நோக்கில் அமைக்கப்பட்டது தான். அதே போல இங்கும்..... முக்கிய கோவிலில்... வசூல் செய்ய கட்டண முறை உள்ளது.. பூஜை நேரம் தவிர நேரடியா சென்றால் 30 நிமிடத்தில்... தரிசனம் செய்ய முடியும்..


VENKATASUBRAMANIAN
அக் 11, 2025 08:18

முதலில் பக்தர்களுக்கு தண்ணீர் கழிப்பிட வசதி செய்து கொடுங்கள். மேலும் முதியோர் வரிசையில் நிற்காமல் உட்கார வசதி செய்து கொடுக்கவும்.


G Mahalingam
அக் 11, 2025 07:10

அறநிலையத்துறை அதிகாரிகள் பல நுழைவு சீட்டுகள் கட்டணத்தை கணக்கில் காட்டுவதில்லை.‌ போலியாக அச்சடித்து வரும் வருமானத்தை கோபாலபுரத்திற்கு அனுப்புகிறார்கள்.


rama adhavan
அக் 11, 2025 06:40

அப்படியே அர்ச்சகர் காணிக்கைக்கும் கோவிலில் டோக்கனாக கொடுக்க வசதி வேண்டும். ருபாய் தருவது கஷ்டமாக உள்ளது. அதிகம் தொகை தந்தால் படி தரிசனம், மாலை மரியாதை முதலியவற்றை தவிர்க்கலாம். கோவில் நிர்வாகம், வருமான வரி துறை களுக்கு வருமானக் கணக்கும் தெரியும். பணப் புழக்கத்தையும் ஒழிக்கலாம்.


KRISHNAN R
அக் 11, 2025 09:59

எல்லா கட்டணமும்... வியாபார பில்கள் எல்லாமும்... வங்கி சலான் வர வேண்டும்.. அப்போது தான் முழு பணமும் கணக்கிற் கு.. வரும்


rama adhavan
அக் 11, 2025 06:33

கோவில் தங்கும் அறைகளையும் ஆன் லைனில் பதிவை துவக்க வேண்டும். உ. ம். ஸ்ரீரெங்கம், பழனி, சமயபுரம் போன்றவை. இப்போது ஆன் லைன் இல்லை. அங்கே சென்று கெஞ்ச வேண்டும். எனவே ஒரே லஞ்ச லாவண்யம்.


முக்கிய வீடியோ