உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது இடங்களில் மது குடிப்பதை தடுக்க போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களில் மது குடிப்பதை தடுக்க போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பொது இடங்களில் மது அருந்துவது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மது விற்பனையை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி, அரியலுார் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ராமசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொது இடங்களில் மது அருந்துவோரை தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, டி.ஜி.பி., சார்பில், அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது' என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு: பொது இடங்களில், மது அருந்தும் நபர்களால், ஏதேனும் பிரச்னைகள் மற்றும் தொந்தரவு ஏற்பட்டால், அது தொடர்பாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளின் தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸாப் எண் வழங்க வேண்டும். பொது இடங்களில் மது அருந்துவது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது, டி.ஜி.பி., ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைக்கு ஒதுக்கப்பட்ட இடம் தவிர, பொது இடங்களில் மது அருந்துவதை கட்டுப்படுத்த, அவ்வப்போது ரோந்துப் பணியை போலீசார் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை மாநிலம் முழுதும் செயல்படுத்த வேண்டும். இது, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு போலீஸ் அதிகாரியின் கடமையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kasimani Baskaran
ஆக 12, 2025 15:29

போலீஸ் வேலை செய்வதாக நினைத்து இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். அநேகமாக இந்த நடைமுறையையும் சிபிஐ அல்லது அமலாக்கத்துறைக்கு ஒதுக்க வாய்ப்பு இருக்கிறது.


ponssasi
ஆக 12, 2025 12:34

புதுச்சேரி முழுவதும் மதுக்கடைகள் தான். அதிலும் பெரும்பான்மையான தமிழக மக்கள் விடுமுறைநாட்களில் மது அருந்த தேர்தெடுக்கும் இடமும் புதுச்சேரி தான். ஆனால் அந்த மக்களோ அரசோ மதுக்கடைகளை மூடுவதோ குடிப்பதை பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிப்பதில்லை தமிழகத்தை விட அங்கு மதுக்கடைகள் அதிகம். தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த குளறுபடி,


Shankar
ஆக 12, 2025 11:11

பொது இடங்களில் மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு குடிப்பவர்களை கைது செய்து என்ன பலன் நீதிபேதி அவர்களே. தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் மூக்கை நுழைக்கும் நீதிமன்றம், இந்த விஷயத்திலும் மூக்கை நுழைத்து மதுக்கடைகள் அனைத்தும் மூட சொல்லி உத்தரவு பிறப்பிக்க முடியுமா?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 12, 2025 10:03

ஊர் முழுவதும் டாஸ்மாக் திறந்துவிட்டு பொது இடங்களில் மது குடிப்பதை தடுக்க போலீசார் ரோந்து மேற்கொண்டால் மது விற்பனை பாதிக்கும் .மது பிரியர்கள் மறைவிடத்திலா மது அருந்து வார்கள் ? .புதிய மது ஆர்வலர்கள் விரக்தியில் குடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வது ,..


Sesh
ஆக 12, 2025 09:24

இன்றைய சிறந்த நகைச்சுவை. எது பொது இடம் என்று சொல்ல வேண்டும். judges வழக்கப்படி சொன்ன உத்திரவு.


GMM
ஆக 12, 2025 08:28

பொது இடங்களில் புகை பிடிக்கும் பழக்கம் கட்டுபாட்டில் உள்ளது. மதுவை மாநில நிர்வாகம் விற்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்க தயங்கும்? பொது, சமூக நலம் கருதி, டாஸ்மாக் கடைகளை மூட மாநில நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும். போலீஸ் பல அமைச்சர் பின் சுற்றுவது, இரு சக்கர வாகனம் வழிமறித்து பிடிப்பது, வாகன சோதனை போன்ற சிறு பணிகளை மேற்கொள்ளுவதால், பெரிய குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு அஞ்சும் நிலை உருவாகும்.


Padmasridharan
ஆக 12, 2025 08:10

ரோந்து வரும் காவலர்களே குடித்துதான் வர்ராங்க, பொது இடத்துல மது குடிக்கிறவங்க கிட்ட மொபைல புடுங்கி பணத்தை அதிகார பிச்சை எடுக்கறாங்க. மத்தவங்கள அந்த இடத்துக்கு வராத மாதிரி அநாகரீமாக, பயப்பட வெச்சி வரவிடாம பார்த்துக்கறாங்க. ஒரு சில இடத்த இவங்களே வாடகை/குத்தகைக்கு விடற மாதிரி இருக்கு. குடிச்சிட்டு ரோட்டில விழுந்த ஆட்களின் பாதுகாப்பை மட்டும் இவங்க கண்டுக்கறதில்ல.


S.V.Srinivasan
ஆக 12, 2025 07:58

தமிழ் நாட்ல இதெல்லாம் நடக்கிற காரியமாங்க ஜட்ஜ் ஐயா.


பேசும் தமிழன்
ஆக 12, 2025 07:48

சாராயத்தை அரசே விற்குமாம் ...அதை குடிப்பவர்களையும் ..... அரசே பிடித்து அபராதம் போடுவார்கள்.. இது தான் விடியல் ஆட்சி போல் தெரிகிறது.. விடியல் வரும் என்று அவர்கள் சொன்ன பொய்யை நம்பி ஓட்டு போட்ட மக்கள் அனுபவியுங்கள். இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது டாஸ்மாக் சாராயக்கடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் என்ற பெயரில் என்னவெல்லாம் நாடகம் போட்டார்கள். இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் சாராயக்கடைகளை மூடுவோம் என்று எப்போது கூறினோம் என்று கூறுகிறார்கள். அப்போ நீங்கள் நடத்தியது எல்லாம் சும்மா நாடகமா?


Kannan Chandran
ஆக 12, 2025 07:47

அப்ப பொது இடத்துல விக்கிறது தப்பில்லையா.


சமீபத்திய செய்தி